ஷூட்டிங்கின் போது விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா - சமந்தா.. நீரில் மூழ்கியதால் பதறிப்போன படக்குழு

Vijay devarakonda and samantha got in accident and fallen into river

தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர்.

தமிழ் மொழியில் தெறி, மெர்சல், 24 போன்ற திரைப்படங்களில் விஜய், சூர்யா போன்ற டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார்.

Vijay devarakonda and samantha got in accident and fallen into river

தெலுங்கிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த சமந்தா, நாக சைதன்யா காதல் திருமணம் செய்து கொண்டார்.

கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் பிரிந்துவிட்டனர்.

Vijay devarakonda and samantha got in accident and fallen into river

அதனைத் தொடர்ந்து, படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலில் ஆட்டம் போட்டது பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆனது.

இவர் நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் கதீஜா கதாபாத்திரம் செம வைரல் ஆகி வரவேற்பு பெற்று வருகிறது.

Vijay devarakonda and samantha got in accident and fallen into river

தற்போது, விஜய் நிர்வாணா இயக்கும் இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது.

இதில் சமந்தா, விஜய் தேவரகொண்டா இருவரும் பங்கேற்று நடித்தனர். அப்போது சமந்தா பிறந்தநாளை படக்குழுவினர் சர்ப்ரைஸ் ஆக கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

Vijay devarakonda and samantha got in accident and fallen into river

குஷி என பெயரிடப்பட்ட இப்படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், குஷி படத்தின் படப்பிடிப்பின் போது சமந்தாவும், விஜய் தேவரகொண்டாவும் விபத்தில் சிக்கி உள்ளனர். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஆக்‌ஷன் காட்சியை படமாக்கி உள்ளனர்.

Vijay devarakonda and samantha got in accident and fallen into river

அப்போது அங்குள்ள ஆற்றின் குறுக்கே இருவரும் பைக்கில் கடந்து செல்வது போன்ற சீனை காட்சிப்படுத்தி உள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து தவறி விழுந்து இருவரும் நீரில் மூழ்கி உள்ளனர்.

Vijay devarakonda and samantha got in accident and fallen into river

பதறிப்போன படக்குழு விரைந்து இருவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். இதையடுத்து சமந்தாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது.

இருவருக்கும் சற்று வலி அதிகமாக இருந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, அவர்கள் ஓய்வு எடுப்பதற்காக ஓட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு பிசியோதெரபி அளிக்கப்பட்டது.

Vijay devarakonda and samantha got in accident and fallen into river

இதையடுத்து இருவருக்கும் பெரிய அடி ஏதும் இல்லாததால் குணமாகி உள்ளனர். குஷி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்ததாக படக்குழு அறிவித்தது. இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 23ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Vijay devarakonda and samantha got in accident and fallen into river

Share this post