சென்னை ஏர்போர்ட்டில் நடிகர் விஜய்.. வைரலாகும் வீடியோ.. ஐதராபாத்தில் முடிந்த தளபதி66 முதற்கட்ட ஷூட்டிங் !
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இருந்தாலும், ரசிகர்கள் நடுவே நல்ல வசூல் பெற்றது. இப்படம் தியேட்டரில் ரெஸ்பான்ஸ் குறையவே, தற்போது OTTயில் வெளியாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி66.
தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் தளபதி66.
இப்படத்தில், விஜய் உடன் சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்டோர் நடிப்பதாக அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியானது.
மேலும், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இப்படத்தின் ஷூட்டிங்காக விஜய் ஹைதராபாத் செல்லும் ஏர்போர்ட் வீடியோ ஒன்று வைரல் ஆனது.
ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் செய்யவுள்ளதாக தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த வாரம், இப்படத்தில் நடிகர் பிரபு மற்றும் பிரகாஷ் ராஜ் இணைவதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டது.
அந்த அறிவிப்பில், இப்படம் வரும் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தில் பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த பிரபல மாடல் அழகியான சம்யுக்தா இணைந்துள்ளதாக தகவல் வெளியானது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என நடந்து வருகிறது. ஏற்கனவே சென்னையில் செட் அமைத்து பாடல் ஷூட்டிங் செய்தனர்.
இந்நிலையில், ஹைதராபாத் சென்றுள்ள தளபதி விஜய், மரியாதை நிமிர்த்தமாக தெலுங்கானா முதலமைச்சர் சந்தரசேகர் ராவ் அவர்களை நேரில் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், விடியோக்களும் வைரலாக பரவி வந்தன.
இதன் நடுவே, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து விஜய் வீடியோ கால் பேசிய புகைப்படங்களும் வைரல் ஆனது.
தற்போது, படக்குழுவினருடன் விஜய் எடுத்த போட்டோ தற்போது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தில் விஜய் உடன் பிரகாஷ் ராஜ், சரத்குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.
தமன் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாடல் சென்னையில் அரபிக் குத்து பாடல் படமாக்கப்பட்ட அதே செட்டில் ஷூட் செய்யப்பட்டது.
இதையடுத்து 2ம் கட்டமாக ஐதராபத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு இந்த மாத துவக்கத்தில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஷூட்டிங் தற்போது முடிவடைந்துள்ளது.
இந்நிலையில், சூட்டிங் முடிந்து விஜய் சென்னை திரும்பியுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
சென்னை ஏர்ப்போட்டில் மாஸ்க் அணிந்தபடி விஜய் இருக்கும் புகைப்படம் இணையத்தில் உலா வருகிறது. விரைவில் ‘தளபதி 66’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Thalapathy @actorvijay returns to Chennai after completing the 2nd schedule of #Thalapathy66 in Hyderabad pic.twitter.com/oo7fqhich7
— Vijay Fans Trends (@VijayFansTrends) May 23, 2022