லிப்கிஸ்.. அடல்ட் காமெடி.. ஜல்சா காட்சிகள்.. வைரலாகும் மன்மத லீலை ட்ரைலர் வீடியோ

Venkat prabu manmadha leelai trailer video trending on youtube

பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான கங்கை அமரனின் மூத்த மகனான வெங்கட் பிரபு, ஸ்ரீகாந்த் மற்றும் சினேகா நடிப்பில் வெளியான ‘ஏப்ரல் மாதத்தில்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த இவர், 2007ம் ஆண்டு ‘சென்னை 28’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

Venkat prabu manmadha leelai trailer video trending on youtube

அப்படம் பிளாக்பஸ்டர் அடித்ததை தொடர்ந்து, சரோஜா, கோவா என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தார். இதற்கெல்லாம் மேலே 2011ம் ஆண்டு அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக மாறினார்.

இதன்பின் பிரியாணி, மாஸ் , சென்னை 28 - இரண்டாம் பாகம் என அனைத்தும் சுமாரான வரவேற்பை பெற்றது. இதனால், சிம்பு வைத்து புது விதமான ஸ்டோரி அடிப்படையில் மாநாடு படத்தை தந்து மீண்டும் வெற்றி கனியை ருசித்தார்.

Venkat prabu manmadha leelai trailer video trending on youtube

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மன்மதலீலை’ திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் அசோக் செல்வன், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். அடல்ட் காமெடி படமாக தயாராகி உள்ள இப்படத்திற்கு சென்சாரில் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

Venkat prabu manmadha leelai trailer video trending on youtube

இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, டீசர், போஸ்டர் அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இதன் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. லிப்கிஸ், இரட்டை அர்த்த வசனங்கள் என அடல்ட் காமெடி படத்துக்கான அத்தனை அம்சங்களும் நிறைந்துள்ள இப்படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

Share this post