தேவயானி சீரியலில் RJ பாலாஜி & அபர்ணா.. வெளியான ப்ரோமோ வீடியோ !

Veetla vishesham team in pudhu pudhu arthangal serial promo video getting viral

RJ, காமெடியன், இயக்குனர், கிரிக்கெட் கமெண்டேட்டர், நடிகர், தொகுப்பாளர் போன்ற பல அவதாரத்தில் திரையுலகில் வலம் வருபவர் RJ பாலாஜி. 92.7 பிக் FM என்னும் ரேடியோ சேனலில் பணியாற்றியதன் மூலம் பிரபலம் அடைந்தவர்.

அதனைத் தொடர்ந்து, நைட் ஷோ வித் RJ பாலாஜி, டேக் இட் ஈஸி, க்ராஸ் டாக் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்தார்.

Veetla vishesham team in pudhu pudhu arthangal serial promo video getting viral

இதன் பின்னர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த பாலாஜி, தீயா வேலை செய்யணும் குமாரு, வடகறி, நானும் ரவுடி தான், புகழ், வாயை மூடி பேசவும், காற்று வெளியிடை, வேலைக்காரன் போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Veetla vishesham team in pudhu pudhu arthangal serial promo video getting viral

மேலும், ஜல்லிக்கட்டு போராட்டம், வெள்ளம் போன்ற பிரச்சனைகளின் போது மக்கள் சார்பில் ஆதாரவு குரல் கொடுத்து தோள் கொடுத்து நின்றவர்.

இவரது பேச்சு மக்களால் மிகுதியாக ரசிக்கப்பட்டு வருகிறது.

Veetla vishesham team in pudhu pudhu arthangal serial promo video getting viral

நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.

இப்படம் வெற்றியடைந்ததை அடுத்து பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பதாய் ஹோ படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

Veetla vishesham team in pudhu pudhu arthangal serial promo video getting viral

அதன்படி வீட்ல விசேஷம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

சத்யராஜ், அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Veetla vishesham team in pudhu pudhu arthangal serial promo video getting viral

இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 17ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், ‘வீட்ல விசேஷம்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

Veetla vishesham team in pudhu pudhu arthangal serial promo video getting viral

கலாட்டாவான காமெடி திரைப்படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. திருமண வயதில் இருமகன் இருக்கும் போது, ஊர்வசி கர்ப்பமாக இருக்கிறார். தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார்.

இதனால், ஆர்.ஜே.பாலாஜியை பார்த்து ஊரே கலாய்ப்பது என காட்சிகள் அமைந்துள்ளது. இப்படத்தில் குக் வித் கோமாளி புகழ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Veetla vishesham team in pudhu pudhu arthangal serial promo video getting viral

படம் வருகிற 17ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக படத்தின் ஹீரோ, ஹீரோயின் பாலாஜி மற்றும் அபர்ணா பாலமுரளி சீரியல் தொடரில் நடித்துள்ளனர்.

Veetla vishesham team in pudhu pudhu arthangal serial promo video getting viral

90ஸ் களில் டாப் நடிகையாக வலம் வந்த நடிகை தேவயானி, சூர்யா வம்சம், காதல் கோட்டை, பாரதி போன்ற தமிழ் திரைப்படங்கள் மூலம் பிரபலம் அடைந்தவர். கிட்டத்தட்ட 50 படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இவர், சின்னத்திரையில் கோலங்கள் தொடரின் மூலம் பிரபலம் அடைந்தார்.

Veetla vishesham team in pudhu pudhu arthangal serial promo video getting viral

தற்போது, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புது புது அர்த்தங்கள் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் வீட்ல விஷேஷம் திரைப்பட குழுவினர் ப்ரோமோஷன்காக பங்கேற்றுள்ளனர். இதன் ப்ரோமோ வீடியோ தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

Share this post