உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள வாரிசு திரைப்படம்.. எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ..
தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா நடிப்பில் வெளியான திரைப்படம் வாரிசு. ஷ்யாம், சங்கீதா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு என நட்சத்திரப் பட்டாளமே நடித்து வெளியான இத்திரைப்படம் கடந்த 11ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இப்படம் முதல் இரண்டு நாட்களில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அதன்பின் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்துள்ளது. மக்கள் வரவேற்பை பெற்று வரும் இத்திரைப்படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அதற்குள் சன் டிவியில் வாரிசு திரைப்படம் எப்போது ஒளிபரப்பாகும் என்பது குறித்து தகவல் வெளியாகிவிட்டது.
அதன்படி, வருகிற ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டிற்கு வாரிசு திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் என தகவல் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வந்தால் தான் உண்மை விவரம் தெரியும்.
இதுகுறித்த எடிட் செய்யப்பட்ட விளம்பர புகைப்படமும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.