BIG BREAKING: விரைவில் '7ஜி ரெயின்போ காலனி - 2' அப்டேட்.. அதிரிபுதிரியாக களமிறங்கிய செல்வராகவன்..!
இயக்குனர்கள் பலர் எடுத்துக்காட்டாக கவுதம் மேனன், ரவிக்குமார், சமுத்திரக்கனி, சசிகுமார் என பலரும் நடிகர்களாகவும் திகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், செல்வராகவன் தற்போது தனது நடிப்பு பயணத்தை தொடங்கியுள்ளார்.
துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன், அதனைத் தொடர்ந்து, காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, NGK, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் போன்ற வித்தியாசமான திரைக்கதைகளை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர்.
பீஸ்ட், சாணி காயிதம், நானே வருவேன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, இதன் 2ம் பாகம் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
ஆயிரத்தில் ஒருவன் & புதுப்பேட்டை படத்தின் 2ம் பாகங்களை இயக்க உள்ளதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே செல்வராகவன் அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துவது போல் ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியான “7ஜி ரெயின்போ காலனி” திரைப்படத்தின் 2ம் பாகம் உருவாகவுள்ளதாக ஒரு சூடான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஏ.எம்.ரத்னம் இயக்கத்தில் செல்வராகவனே இப்படத்தை இயக்கவுள்தாக கூறப்படுகிறது. மேலும் முந்தைய படத்தில் நடித்த ரவி கிருஷ்ணாவே இதில் ஹீரோவாக நடிக்கிறாராம். அதே போல் இத்திரைப்படத்தின் கதாநாயகிக்கான தேடலில் படக்குழு இருப்பதாகவும் கூறப்படுகிறது.