பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வனிதா.. BB டீம் வெளியிட்ட வீடியோ

Vanitha walks out of bb house viral promo on social media

பிக்பாஸ் நிகழ்ச்சில் வெற்றிகரமாக 5 சீசன் முடிவடைந்த நிலயில், இதன் BB அல்டிமேட் என்னும் 24 நேர ஒளிபரப்பு நிகழ்ச்சி தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டார் ஆப்பில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கடந்த 5 சீசன்களில் பங்கேற்ற 14 போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து களமிறக்கியுள்ளனர்.

அதன்படி சினேகன், ஜூலி, சுஜா வருணி, ஷாரிக், தாடி பாலாஜி, அபிராமி, வனிதா, அனிதா, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, நிரூப், தாமரைச் செல்வி, சுருதி மற்றும் அபிநய் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். இதில் சுரேஷ் சக்ரவர்த்தியும், சுஜா வருணி, அபிநய் மற்றும் ஷாரிக் ஆகியோர் எலிமினேட் ஆகினர். மீதமுள்ள 10 பேருக்கிடையே கடும் போட்டி நிலவி வந்தது.

இந்நிலையில், நடிகை வனிதா நேற்று இரவு திடீரென பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவர் வெளியேறியபோது என்ன நடந்தது என்ற வீடியோவை பிக்பாஸ் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Share this post