இந்நேரம் வனிதா அக்கா மட்டும் உள்ள இருக்கனும்.. அசல் செய்வதை புட்டு புட்டு வைத்த வனிதா.. Viral Video!
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சண்டைக்கு கொஞ்சம் கூட குறைச்சல் இல்லாமல் அரங்கேறி வருகிறது. கடந்த சில வாரங்களாக அசல் செய்யும் சில சேட்டைகள் குறித்து சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது. அவர் பெண்களிடம் தவறாக நடந்துகொள்கிறார் என்பது மக்களின் பெரிய கோபமாக உள்ளது.
பெண்களிடம் சில்மிஷம் செய்துவரும் அசல் கோளாறு தனலட்சுமியை பார்த்து உருவ கேலி செய்துள்ளார். தினமும் ஒவ்வொரு பெண் போட்டியாளர்களிடம் அத்துமீறி வருகிறார் அசல் கோலார் என குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டு வருகிறது. பிக்பாஸ் ரசிகர்கள் சிலர் அசல் கோளாறை வெளியேற்ற வேண்டும் என கூறி வருகிறார்கள். இவர் நாமினேஷனின் சிக்கினால் இவரை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என சிலர் துடித்து துடித்து கொண்டிருக்கின்றனர்.
கடந்த வாரம், இது குறித்து நேரடியாக கமல் கூறாமல், சூசகமாக சொல்லியும் திருந்தாமல், நிவாஷினியை தோலில் கடிப்பது, படுக்கையில் நிவாவுடன் லீலைகளில் ஈடுபட்டது என எல்லைமீறி சென்று வருகிறது. இதனால் இவரை ரெட் கார்ட் கொடுத்து அனுப்ப வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில், வனிதா அக்கா இப்போ உள்ள இருந்தா நல்லா இருக்கும் என பலரும் எண்ணி வருகின்றனர்.
அதுகுறித்த மீம்ஸ் பதிவு ஒன்று செம வைரலாகி வருகிறது. மேலும், இதனால் நிவாஷினியிடம் அசல் நடந்துகொள்ளும் விதம் குறித்து பேசி இருக்கும் வனிதா ‘வெளியில் இருந்து அவன் செய்வதை பார்க்கும் போது மிகவும் அருவருப்பாக இருக்கிறது. அவன் லவ் பண்ணுகிறேன் என்றால் அதை பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் நமக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், அவன் நடந்துகொள்ளும் விதம் அவனுடைய Body Language எல்லாத்தையும் பார்க்கும்போது அவன் மனதிற்குள் ஏதோ இருக்கிறது. மேலும், நிவாஷினி அசல் மீது விருப்பத்துடன் இருக்கிறாரா என்பது எனக்கு தெரியல’ என்று கூறியுள்ளார்.