இதெல்லாம் என் பிரச்னை இல்ல.. கருத்துகளுக்கு பதிலடி கொடுத்த வனிதா..!

Vanitha answers for trollers and people who hate her

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது 5 சீசன் கடந்து ஓடி கொண்டிருக்கும் பிக் பாஸ், தற்போது BB Ultimate என்னும் ஷோ 24 மணி நேரம் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் கடந்த 5 சீசன் பங்கேற்ற 14 போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து இதில் பங்கேற்க வைத்து வருகின்றனர். கடந்த சில வாரங்களில் சுரேஷ், சுஜா, ஷாரிக், அபிநய் உள்ளிட்டோர் எலிமினேட் ஆன நிலையில், வனிதா தாமாக வெளியே சென்றுள்ளார்.

இந்த ஷோவை கமல் தொகுத்து வழங்கி வந்த நிலையில், சிம்பு இனி தொகுத்து வழங்குவார் என டீம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் வீட்டில் பல சண்டைகளில் இருந்ததும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வந்த வனிதா mental health பாதிக்கிறது என சொல்லி வெளியே வந்தார்.

இந்நிலையில் தற்போது வெளியான வனிதா இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

Share this post