'பிக்பாஸ்'ல ஜெயிச்சா அவ்ளோ பெரிய ஆளா?' ஆரியின் செயலால் கடுப்பாகி பேசிய உதயநிதி !

Udhayanidhi speaks about aari in nenjukku needhi success meet

2019ம் ஆண்டு இந்தியில் ரிலீசான பிளாக்பஸ்டர் படமான ஆர்டிகிள்15 படத்தின் தமிழ் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. தமிழக முன்னாள் முதல்வரான மு.கருணாநிதி அவர்கள் எழுதிய நெஞ்சுக்கு நீதி என்னும் புத்தகத்தின் பெயரையே இப்படத்திற்கு வைத்துள்ளனர்.

டைரக்டர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ஆரி அர்ஜுனன், தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

Udhayanidhi speaks about aari in nenjukku needhi success meet

2021ம் ஆண்டு டிசம்பர் மாதமே இப்படத்தின் ஷுட்டிங் நிறைவடை நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

2022ம் ஆண்டு கடந்த மே 20ம் தேதி தியேட்டர்களில் இப்படம் ரிலீஸ் ஆனது. சாதி ஏற்றத்தாழ்வுகளை கதைக்களமாக கொண்டுள்ள இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Udhayanidhi speaks about aari in nenjukku needhi success meet

ஆணவக் கொலை, பூமியில் பிறக்கும் அனைத்து உயிர்களும் சமம் போன்ற பல விஷயங்களை ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளார். ஹிந்தியில் வெளிவந்த படத்தை, நம் சூழ்நிலைக்கு ஏற்ப திரைக்கதையை அழகாக மாற்றி அரசியல், சாதி போன்ற பிரிவினையை காட்டி உயர்வு தாழ்வு பேசுபவர்களுக்கு பாடம் கற்பிற்கும் வகையில் படத்தை கொடுத்துள்ளார் அருண்ராஜா.

Udhayanidhi speaks about aari in nenjukku needhi success meet

சாதி குறித்த வசனங்கள் பொது சமூகத்தினரின் மனசாட்சியை உலுக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

நேர்மையாக பணியாற்றும் ASP விஜயராகவனாக உதயநிதி ஸ்டாலின், அதிகாரவர்கத்தை எதிர்த்து போராடும் ஆரி, மேலும், நடிகர்கள் சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, மயில்சாமி என அவரவர் கதாபாத்திரங்களை நேர்த்தியாக தந்துள்ளனர்.

Udhayanidhi speaks about aari in nenjukku needhi success meet

இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் மத்தியிலும், வசூல் ரீதியாகவும் நல்ல படமாகவே அமைந்தது. வெற்றிப்படமாக அமைந்ததை கொண்டாடும் விதமாக இப்படத்தின் சக்சஸ் மீட் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

Udhayanidhi speaks about aari in nenjukku needhi success meet

அப்போது பேசிய உதயநிதி, ஆரி குறித்து பேசுகையில், பிக்பாஸ் முடிந்ததும் ஆரியை எனது வேறொரு படத்தில் நடிக்க கேட்பதற்காக போன் போட்டேன். ஆனால் பலமுறை அழைத்தும் அவர் என் போன் எடுக்கவில்லை. ‘பிக்பாஸ்-ல ஜெயிச்சா அவ்ளோ பெரிய ஆள் ஆகிடுவாங்களானு’ கடுப்பாகிட்டேன்.

Udhayanidhi speaks about aari in nenjukku needhi success meet

பின்னர் ஒரு நாள் அவரே போன் போட்டு பேசினார். ‘பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆன பிறகு நிறைய போன் கால், மெசேஜ் அதனால போன் சுவிட்ச் ஆப் பண்ணிவிட்டதாக’ கூறினார். அதற்குள் அந்த படத்தின் ஷூட்டிங் பாதி முடிந்துவிட்டதால் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடிக்க ஓகே வானு கேட்டேன். உடனே சம்மதம் சொல்லி நடித்தார்” என கூறினார்.

இந்த வீடியோ செம வைரல் ஆகி வருகிறது.

Share this post