சோழ இளவரசி குந்தவையின் பல அவதாரங்கள்.. அப்டேட்டுடன் இணையத்தில் வைரலாகும் திரிஷாவின் Exclusive போட்டோஸ்..!

trisha various get up for ponniyin selvan kundavai role and first update video release

பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் இரண்டு பாகங்களாக திரைப்படம் இயக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். இதன் முதல் பாகமான பொன்னியின் செல்வன் 1, உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது.

trisha various get up for ponniyin selvan kundavai role and first update video release

சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், விக்ரம் பிரபு, கிஷோர், லால், ரஹ்மான், ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்துள்ளனர்.

trisha various get up for ponniyin selvan kundavai role and first update video release

பல ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என ஏரளமான திரை பிரபலங்கள் கனவு கண்ட நிலையில், அதனை மணிரத்னம் சாதித்துக் காட்டி உள்ளார். மேலும், திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

trisha various get up for ponniyin selvan kundavai role and first update video release

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய ‘பொன்னியின் செல்வன்’ கதையை, எவ்வளவு நேர்த்தியாக ரசிகர்கள் கண்களுக்கு காட்சிப்படுத்த முடியுமோ, அதனை மிக சிறப்பாக செய்துள்ளார் மணிரத்னம். வசூலையும், பாசிட்டிவ் ரிவ்யூக்களையும் அள்ளி குவித்து வரும் இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

trisha various get up for ponniyin selvan kundavai role and first update video release

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகப் போகிறது என்கிற அறிவிப்புடன் வெளியான புதிய ப்ரமோ கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியானது.

trisha various get up for ponniyin selvan kundavai role and first update video release

தற்போது, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான திரிஷாவின் குந்தவை கதாபாத்திரத்தில் பல கெட்டப்களில் உருவான வீடியோ ஒன்றை வெளியிட்டு, அந்த வீடியோவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் இரட்டிப்பாக்கி உள்ளது.

Share this post