தளபதி67 குறித்த கேள்விக்கு மழுப்பலாக பதிலளித்த த்ரிஷா.. என்ன சொன்னார்னு பாருங்க.. !

trisha avoids to answer thalapathy67 question in ponniyin selvan promotion

பிரபல மாடலிங் அழகியான த்ரிஷா, மிஸ் சென்னை போட்டிக்கு பிறகு திரையுலகத்தில் அறிமுகமானார். ஜோடி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷா, மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் செம பேமஸ் ஆனார்.

trisha avoids to answer thalapathy67 question in ponniyin selvan promotion

தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி திரையுலகில் டாப் நடிகையாக வலம் வருகிறார். லேசா லேசா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், எனக்கு 20 உனக்கு 18, மௌனம் பேசியதே, சாமி உள்ளிட்ட அடுத்தடுத்த வெற்றி படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். மேலும், 90ஸ்களில் கனவு கன்னியாக இருந்தவர்.

trisha avoids to answer thalapathy67 question in ponniyin selvan promotion

விண்ணைத்தாண்டி வருவாயா, 96, கொடி போன்ற திரைப்படங்கள் இவரது நடிப்பு பயணத்தில் பெரிய மைல்கல்களாக மாறியது. விஜய், அஜித், சூர்யா, சிம்பு, ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்தவர்.

trisha avoids to answer thalapathy67 question in ponniyin selvan promotion

39 வயது ஆன போதிலும், இன்னும் அதே அழகுடன் மக்கள் மனங்களை கவர்ந்து வருகிறார். நடிகை திரிஷா கர்ஜணை, சதுரங்க வேட்டை 2, பொன்னியின் செல்வன், ராம், ராங்கி போன்ற படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

trisha avoids to answer thalapathy67 question in ponniyin selvan promotion

இதனைத் தொடர்ந்து, அண்மையில், ‘தி ரோட்’ என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். புதுமுக இயக்குனர் அருண் வசீகரன் என்பவர் இயக்கும் இப்படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ஷபீர் நடிக்கிறார். மேலும், தெலுங்கு வெப் சீரிஸில் திரிஷா போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார். அந்த வெப் சீரிஸ் பெயர் ‘பிருந்தா’. விரைவில் இந்த வெப் சீரிஸ் வெளிவரவுள்ளது.

trisha avoids to answer thalapathy67 question in ponniyin selvan promotion

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரிஷாவை திரையில் காணவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். பொன்னியின் செல்வன் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன்காக இப்படத்தின் நடிகர் - நடிகைகள் பல்வேறு பேட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.

trisha avoids to answer thalapathy67 question in ponniyin selvan promotion

அப்போது, தளபதி67 படத்தில் நடிக்கிறீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நடிகை திரிஷா, தற்போது, பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷனில் நாம் இருக்கிறோம் எனவே இந்த படத்தைப் பற்றி பேசினால் ரொம்ப நல்லது என கூறியுள்ளார். இச்செய்தி இணையதள பக்கத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Share this post