அரியவகை நோய் பாதிப்பால் அமெரிக்கா சென்ற சமந்தா ? சமந்தா தரப்பு கொடுத்த விளக்கம்

samantha off to america for her skin treatment rumours spreading viral

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

samantha off to america for her skin treatment rumours spreading viral

தெலுங்கில், ஓ பேபி, ரங்கஸ்தலம், மகாநதி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் ஏற்பட்ட காதலால் நாகார்ஜுனா மற்றும் அமலா அவர்களின் மூத்த மகனான நடிகர் நாகசைதன்யா அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

samantha off to america for her skin treatment rumours spreading viral

2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள், ஸ்வீட் ஜோடியாக வலம் வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களுக்கு முன் இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டனர். விவாகரத்திற்கு பின்னர், திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ள சமந்தாவின் ஊ சொல்றியா மாமா பாடல் செம ஹிட் அடித்தது. மேலும், திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

samantha off to america for her skin treatment rumours spreading viral

நாக சைதன்யாவும் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வந்த நிலையில், நடிகர் நாக சைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவலை நிராகரிக்கும் வகையில் நாக சைதன்யா விளக்கம் அளித்திருந்தார். அதாவது, சமந்தாவுக்கும், இவருக்கும் இன்னும் விவாகரத்து நடக்கவில்லை, வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாக கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

samantha off to america for her skin treatment rumours spreading viral

எத்தனை நடந்தாலும், சமந்தா - நாக சைதன்யா அவர்களின் விவாகரத்து குறித்த காரணம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது நடிகை சமந்தா 2வது திருமணம் செய்துகொள்ளபோவதாக தகவல் வெளியானது.

samantha off to america for her skin treatment rumours spreading viral

இந்நிலையில், ஷிவா நிர்வாணா இயக்கும் படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வந்த சமந்தா, ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென அமெரிக்கா கிளம்பி சென்றுவிட்டார். அவரின் திடீர் அமெரிக்க பயணம் பல்வேறு யுகங்களை கிளப்பியது.

samantha off to america for her skin treatment rumours spreading viral

அதன்படி அவருக்கு அரிய வகை தோல் நோய் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே சமீப காலமாக சோசியல் மீடியாவில் எந்தவித பதிவுகளையும் போடாமல் அதில் இருந்து ஒதுங்கி இருந்து வந்ததாகவும், தற்போது அதற்கு சிகிச்சை பெறுவதற்காகத்தான் அவர் அமெரிக்கா சென்றுள்ளதாகவும் தகவல் பரவி வந்தது.

samantha off to america for her skin treatment rumours spreading viral

இந்நிலையில் நடிகை சமந்தா தரப்பில் இருந்து தற்போது இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அவரது மேனேஜர் மகேந்திரா என்பவர் கூறியதாவது: சமந்தா நலமுடன் இருக்கிறார். அவருக்கு எந்தவிதமான உடல்நலப் பிரச்சனையும் இல்லை. தயவு செய்து வதந்திகளை நம்பாதீர்கள் என தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் எதற்காக அமெரிக்கா சென்றார் என்ற காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. மேலும், இதற்காக மருத்துவமனையில் சமந்தா அட்மிட் ஆகியுள்ளதாகவும் வதந்திகள் வெளியாகியுள்ளது

Share this post