அரசியல் கட்சியில் இணைவது குறித்து நடிகை திரிஷாவே கூறிய பதில் !

trisha answers about politics entry rumours

பிரபல மாடலிங் அழகியான த்ரிஷா, மிஸ் சென்னை போட்டிக்கு பிறகு திரையுலகத்தில் அறிமுகமானார். ஜோடி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷா, மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் செம பேமஸ் ஆனார்.

trisha answers about politics entry rumours

தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி திரையுலகில் டாப் நடிகையாக வலம் வருகிறார். லேசா லேசா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், எனக்கு 20 உனக்கு 18, மௌனம் பேசியதே, சாமி உள்ளிட்ட அடுத்தடுத்த வெற்றி படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். மேலும், 90ஸ்களில் கனவு கன்னியாக இருந்தவர்.

trisha answers about politics entry rumours

விண்ணைத்தாண்டி வருவாயா, 96, கொடி போன்ற திரைப்படங்கள் இவரது நடிப்பு பயணத்தில் பெரிய மைல்கல்களாக மாறியது. விஜய், அஜித், சூர்யா, சிம்பு, ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்தவர்.

trisha answers about politics entry rumours

39 வயது ஆன போதிலும், இன்னும் அதே அழகுடன் மக்கள் மனங்களை கவர்ந்து வருகிறார். நடிகை திரிஷா கர்ஜணை, சதுரங்க வேட்டை 2, பொன்னியின் செல்வன், ராம், ராங்கி போன்ற படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

trisha answers about politics entry rumours

இதனைத் தொடர்ந்து, அண்மையில், ‘தி ரோட்’ என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். புதுமுக இயக்குனர் அருண் வசீகரன் என்பவர் இயக்கும் இப்படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ஷபீர் நடிக்கிறார். மேலும், தெலுங்கு வெப் சீரிஸில் திரிஷா போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார். அந்த வெப் சீரிஸ் பெயர் ‘பிருந்தா’. விரைவில் இந்த வெப் சீரிஸ் வெளிவரவுள்ளது.

trisha answers about politics entry rumours

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரிஷாவை திரையில் காணவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில், நடிகை திரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.

trisha answers about politics entry rumours

நடிகை நயன்தாரா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டதால், விரைவில் நடிகை திரிஷாவும் திருமணம் செய்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது, விரைவில் நடிகை திரிஷா அரசியலில் நுழைய திட்டமிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. அதுவும் தேசிய கட்சியான காங்கிரஸில் இணைந்து பணியாற்ற திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டது.

trisha answers about politics entry rumours

அரசியலில் எண்ட்ரி கொடுத்தால் தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா அல்லது சினிமாவிற்கு டா டா காட்டிவிடுவாரா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில், தற்போது, நடிகை திரிஷாவே இது குறித்து விளக்கமளித்து இருக்கிறார். அதன்படி “கொஞ்சமும் உண்மையில்லாத தகவல் இது, எப்படி இப்படி ஒரு செய்தி பரவியது என்று எனக்கே தெரியல. எனக்கு அரசியலில் சேரும் எண்ணம் துளியுமில்லை” என கூறி இணையத்தில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் திரிஷா.

Share this post