தொடர்ந்து மரண ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்.. பதிலடி கொடுத்த சித் ஸ்ரீராம் !
பிரபல திரையுலக பின்னணி பாடகராக வலம் வருபவர் நடிகர் சித் ஸ்ரீ ராம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் பிரபல பாடல்களை பாடியுள்ளார். இவரது குரலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
2013ம் ஆண்டு, கடல் என்னும் திரைப்படத்தில் பாடிய அடியே என்னும் பாடல் மூலம் தமிழ் திரையுலகில் பின்னணி பாடகராக அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து, ஐ படத்தில் என்னோடு நீ இருந்தால், நானும் ரவுடி தான் படத்தில் எனை மாற்றும் காதலே தொடங்கி பல பிரபல பாடல்களை பாடியுள்ளார்.
பின்னர் தள்ளி போகாதே, மறு வார்த்தை பேசாதே என்று தொடர்ந்து பல நல்ல பாடல்களை பாடி இருக்கிறார். தற்போது வெளியான விருமன் படத்தில் கஞ்சா பூவு கண்ணால என்ற பாட்டையும் அவர் பாடியிருக்கிறார். இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது.
ஆனால் சித் ஸ்ரீராம் மீது ஒரு குற்றச்சாட்டு எப்போதும் முன் வைக்கப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. அவர் பாட்டை அனுபவித்துப் பாடுகிறேன் என்ற பெயரில் அவர் பாடும் விதத்தை பலரும் விமர்சித்து வருவதுண்டு. இவர் பாடிய பாடல்களை மேடையில் லைவ் ப்ரோக்ராமில் பாடும் பொழுது இவர் உணர்ச்சிவசப்பட்டு துள்ளி குதிப்பதும், அந்தப் பாடலை சில ஸ்வரங்களை போட்டு இழு இழு என இழுப்பதும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. கர்ணன் படத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் கணீர் குரலில் உருவான பாடல் தான் உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது.
இந்தப் பாடலைக் கேட்கும் பலருக்கும் கண்களில் கண்ணீர் வரும் அளவிற்கு மிக உணர்ச்சிப்பூர்வமாக பாடி இருப்பார் சீர்காழி கோவிந்தராஜன். சமீபத்தில் சித் ஸ்ரீராம் அந்த பாடலை ஒரு மேடையில் பாடியிருந்தார். அப்போது அவர் ஸ்வரங்கள் போட்டு பாடலை இழு இழு என இழுத்து பாடினார். அதைக் கேட்ட பலரும் அவரைத் திட்டி தீர்த்தனர். இந்த பாடலை இப்படி கொலை செய்து விட்டீர்களே என்று அவரை திட்டினர்.
தற்போது மீண்டும் தள்ளி போகாதே பாடலை ஒரு மேடையில் பாடும் போது உணர்ச்சி பெருக்கில் அவர் துள்ளி குதித்து பாடினார். இதை ஒரு மதக் கூட்டத்தில் நடக்கும் சம்பவம் போன்று இணைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ் போட்டு தள்ளினர். இதனால் கடுப்பான சித் ஸ்ரீராம் தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருந்தார். பதிவிட்ட சில நிமிடங்களிலேயே அந்த பதிவை நீக்கியும் இருந்தார்.
ஏலே @sidsriram என்னயா இது 😂
— சிங்கம்🦁 (@Singamonfire) August 9, 2022
அந்த எடிட்டிங் வேற லெவல் 🤣🤣 pic.twitter.com/7P2t3Cjb54
— ராஸ்கல் (@Rascal1_) December 28, 2021