'The Legend' திரைப்படம் எப்படி இருக்கு ? வெளியான விமர்சனங்களின் தொகுப்பு இதோ !
பிரபல கடையான சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் அதன் உரிமையாளர் சரவணன் அருள் பற்றி நம்மில் பலருக்கும் தெரியும். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் என்றாலே நினைவுக்கு வருபவர். தனது கடைகளின் விளம்பரங்களில் நடிகர்களை நடிக்க வைக்காமல் இவரே பல விதமான உடைகளை அணிந்து விளம்பரங்களில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஒன்றுக்கும் மேற்பட்ட முன்னணி நடிகைகளை நடித்துள்ளனர்.
இந்நிலையில், சரவணன் அருள் சமீபத்தில் இயக்குனர் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் ‛தி லெஜண்ட்’ என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா, ராய் லக்ஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரோபோ சங்கர், சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு, மயில்சாமி, பிரபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஏற்கனவே ஜேடி ஜெர்ரி, உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கி உள்ள இவர்களுக்கு இது மூன்றாவது படம். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. இதனால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
படத்தை பார்த்த ரசிகர்கள், அறிவியல் புனை கதையாக கூறப்படும் இந்தப் படம் காமெடி ஸ்கூப் திரைப்படம் என கூறி வருகின்றனர். திரையரங்குகள் குவிந்துள்ள ரசிகர்கள் தி லெஜண்ட் படம் குறித்து ஆரவாரம் எழுப்பி மகிழும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், இப்படம் குறித்து விமர்சனம் செய்துள்ள ரசிகர் ஒருவர், ‘வேடிக்கையான காட்சிகள், வசனங்கள் மற்றும் காட்சிகளுக்காக, ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு முழு தியேட்டர் ஆரவாரம், கைதட்டி, ஒரே குரலில் சிரிப்பதை பார்த்ததில்லை’ என தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
Its not Vijay / Ajith Movie...#TheLegendmovie #LegendSaravanan #TheLegend #Rohinitheatre pic.twitter.com/x5IuWhtoYy
— Movie Fellow (@MovieFellow) July 28, 2022
Mass dialogue#TheLegend #TheLegendSaravanan #DrSTheLegend
— M.Kalidass (@MKalida10461342) July 28, 2022
FDFS pic.twitter.com/ZcPidZKwrv