நடிகை சுனைனாவுக்கு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்த தளபதி விஜய்.. விஷாலுக்கு வாழ்த்து கூறி அனுப்பிய விஜய் !

Thalapathy vijay surprised sunaina in flight laththi teaser launch video getting viral

நகுல் ஜோடியாக காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை சுனைனா. சிவாஜி திரைப்படத்தில் ஸ்ரேயாவுக்கு முன் இவரை தான் கதாநாயகியாக வைத்து ஒரு சீன் கூட எடுத்து ட்ரையல் பார்த்துள்ளனர் படக்குழுவினர். ஆனால், ஏனோ இவரை விட்டுவிட்டு ஸ்ரேயாவை முடிவு செய்தனர்.

Thalapathy vijay surprised sunaina in flight laththi teaser launch video getting viral

காதலில் விழுந்தேன் படத்தை தொடர்ந்து, மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை என பல விதமான கதாபாத்திரங்களில் நடித்தார். சமர், வன்மம், தெறி, கவலை வேண்டாம், தொண்டன் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

Thalapathy vijay surprised sunaina in flight laththi teaser launch video getting viral

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் முன்பே தெலுங்கு மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் சுனைனா. தற்போது 2 தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் சில வெப் சீரீஸ்களிலும் நடித்துள்ளார். தற்போது லத்தி படத்தில் நடித்துள்ளார். இதன் டீசர் வெளியீட்டு விழாவில் தற்போது கலந்துகொண்டுள்ள சுனைனா, ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Thalapathy vijay surprised sunaina in flight laththi teaser launch video getting viral

சமீபத்தில், நடிகர் விஜய் மற்றும் சுனைனா ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது, விஜய் தனது உதவியாளரின் போனிலிருந்து சுனைனாவுக்கு போன் செய்து சுனைனாவை ஆச்சரியப்படுத்தி உள்ளார். விஜயின் அருகில் அமர்ந்த சுனைனா, தனது சென்னை பயணம் குறித்தும், ‘லத்தி’ படத்தின் டீசர் வெளியீட்டு குறித்தும் தெரிவித்துள்ளார். சுனைனாவுக்கு வாழ்த்துக்கள் கூறிய விஜய் அப்படியே விஷலுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.

Share this post