தளபதி66 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புகைப்படம்.. நட்சத்திர பட்டாளமே இருக்கும் போல !

Thalapathy66 shooting spot photo got leaked on internet

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும், ரசிகர்கள் நடுவே நல்ல வசூல் பெற்றது. இப்படம் தியேட்டரில் ரெஸ்பான்ஸ் குறையவே, தற்போது OTTயில் வெளியாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி66. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் தளபதி66. இப்படத்தில், விஜய் உடன் சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்டோர் நடிப்பதாக அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியானது.

Thalapathy66 shooting spot photo got leaked on internet

மேலும், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இப்படத்தின் ஷூட்டிங்காக விஜய் ஹைதராபாத் செல்லும் ஏர்போர்ட் வீடியோ ஒன்று வைரல் ஆனது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் செய்யவுள்ளதாக தகவல் வந்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த வாரம், இப்படத்தில் நடிகர் பிரபு மற்றும் பிரகாஷ் ராஜ் இணைவதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பில், இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், இப்படத்தில் பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த பிரபல மாடல் அழகியான சம்யுக்தா இணைந்துள்ளதாக தகவல் வெளியானது.

தற்போது, தளபதி66 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படம் ஒன்று வெளியானதாக ஒரு ஸ்டில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தில் சரத்குமார் மற்றும் மனோபாலா இருவரும் இருக்கிறார்கள்.

ஒரு பக்கம் இது தளபதி66 படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படம் என்று கூறி வர, மற்றொரு புறம் இது வேறொரு படத்தின் படப்பிடிப்பு என்றும் கூறப்பட்டு வருகிறது.

Thalapathy66 shooting spot photo got leaked on internet

Thalapathy66 shooting spot photo got leaked on internet

Share this post