'விக்ரம்' படத்தில் கமல் மகனாக சூர்யா? கசிந்த அடுத்த அப்டேட் ! இது நம்ம லிஸ்ட்ல இல்லாத ட்விஸ்ட் !

Surya to act as kamal haasan son in vikram movie

அரசியல், நடிப்பு, பிக் பாஸ் என பிசியாக வலம் வந்த கமல் ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கும் திரைப்படம் விக்ரம். மாநகரம், கைதி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

தற்போது, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிப்பு மற்றும் நடிப்பில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், பிக்பாஸ் சிவானி, தொகுப்பாளினி மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் விக்ரம்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக கன்னடத்தில் இளம் நடிகையாக வலம் வரும் ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடித்துள்ளார்.

Surya to act as kamal haasan son in vikram movie

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து புரோமோஷன் வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. உண்மையில் இன்றுடன் தான் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் முடிவடைய உள்ளதாகவும் கிட்டத்தட்ட மூன்று கோடி செலவில் உருவாக்கவுள்ளதாவும் கூறப்படுகிறது.

வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற 15ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. ரிலீசுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் இந்த படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகிய வண்ணம் உள்ளன.

இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது.

இதற்கிடையே அனிருத் இசையில் விக்ரம் படத்தின் முதல் பாடல் ‘பத்தல பத்தல’ பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஏகப்பட்ட ட்விஸ்ட் கொண்ட விக்ரம் படத்தில் கமலின் மகனாக சூர்யா நடித்துள்ளாராம். அதுவும் கிளைமாக்ஸில் பாகுபலி ஸ்டைலில் சூர்யா வருவார் என்று கூறப்படுகிறது.

அதோடு கமல் நடிப்பில் 1986ம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த விக்ரம் படத்தின் சில காட்சிகளும் இந்த விக்ரம் படத்தில் இடம்பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. நான்கு ஆண்டுகள் கழித்து வந்தாலும் கமலின் விக்ரம் சரியான ட்ரீட்டாக இருக்கும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Surya to act as kamal haasan son in vikram movie

Share this post