மருத்துவமனையில் தந்தை SAC.. ஆனாலும் விஜய் இப்படி செஞ்சிருக்க கூடாது.. போட்டோவால் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!

thalapathy vijay met his father who has undergone operation photo viral

பிரபல இயக்குனர் சந்திரசேகரின் மகன் நமது தற்போதைய தளபதி நடிகர் விஜய். தனது தந்தை இயக்கத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், தற்போது ஆல் இந்தியா லெவெலுக்கு பேமஸ்.

எட்டிப்பிடிக்க இயலாத அளவிற்கு உச்சத்தில் உள்ள விஜய், 90 களின் பிற்பாதியில் வெளியான படங்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். பொங்கல் பண்டிகையையொட்டி இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியானது.

thalapathy vijay met his father who has undergone operation photo viral

என்னதான், திரையுலகை பொறுத்தவரை விஜயை கொண்டாடி வந்தாலும், விஜய் அவர்களின் சொந்த வாழ்க்கை குறித்து நெகட்டிவ் விமர்சனங்களும் கருத்துக்களும் ஏராளமாக உலாவி வருகிறது. அவருக்கும் அவரின் பெற்றோருக்கும் உள்ள கருத்து வேறுபாடு குறித்து அதிகம் பேசப்பட்டு வந்தது.

அவருக்கும் அவரது மனைவிக்கும் விவாகரத்து ஆகவிருப்பதாக தகவல்கள் வேகமாக பரவி வந்தது. ‘லியோ’ படப்பிடிப்பை முடித்த நிலையில், நடிகர் விஜய் தற்போது ‘தளபதி 68’ படத்தில் பிஸியாக உள்ளார்.

இந்த படத்தின் டெஸ்ட் ஷுட்டிற்காக கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தார். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் இயக்குநர் எஸ்ஏசி இதயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதுகுறித்த செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகின.

தற்போது, அமெரிக்காவிலிருந்து திரும்பிய விஜய் தந்தையை நேரில் சென்று நலம் விசாரித்தார். தாய் தந்தையுடன் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

thalapathy vijay met his father who has undergone operation photo viral

விஜய்க்கும் எஸ் ஏ சிக்கும் மோதல் என கருத்துக்கள் பரவி வந்த நிலையில் தனது தந்தையுடன் விஜய் இருக்கும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

இந்நிலையில், கடந்த சில மாதங்கள் முன்பே, SAC தனக்கு உடம்பு கொஞ்சம் சரியில்லை என கூறியிருந்தார். அதனை தொடர்ந்து, இந்த சிகிச்சை நடந்துள்ளது. இதனை நாட்கள் பார்க்காமல், இப்பொது பார்த்துவிட்டு அந்த போட்டோ வைத்து ட்ரெண்ட் ஆகி வருகிறார். இப்படி விஜய் செய்ய கூடாது என சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Share this post