ரசிகர்களை நேரில் சந்தித்த விஜய்.. வைரலாகும் வீடியோ !
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி66. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.
மேலும், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. பின்னர், இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடந்தது. இப்படத்தில் நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை சங்கீதா, பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த பிரபல மாடல் அழகியான சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படம் வரும் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என நடந்து வந்தது. படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.
படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்களும் வீடியோக்களும் கசிந்து வருகிறது. இரண்டு அண்ணங்களுக்கு தம்பியாக விஜய் நடிக்கும் இந்த படத்தில் வெளிநாட்டில் இருந்த நாயகன் குடும்பத்திற்காக கிராமத்திற்கு திரும்பும் தோற்றத்தில் விஜய் நடிக்கிறாராம். இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய். தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் மூன்று போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியது.
ஹைதராபாத், விசாகப்பட்டினத்தை தொடர்ந்து தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சென்னை எண்ணுரில் நடைபெற்ற படப்பிடிப்பு தளத்தில் விஜயை காண ரசிகர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.
பின்னர் கூட்டத்தை களைக்க போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் தளபதி எங்களிடம் கை காட்டினால் கூட போதும் ஏன கோபித்து கொண்டனர். இந்நிலைகள் படப்பிடிப்பில் இருந்து வெளியே வந்த விஜய் ரசிகர்களுக்கு கை காட்டும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களுக்கு கையசைத்த விஜய்!#ThalapathyVijay |#VarisuPongal |#varisu |#VarisuPongal2023 |#Vijay pic.twitter.com/PHoLGVMILa
— Tamil Diary (@TamildiaryIn) September 30, 2022