அந்த 6 பேருமே ஒருத்தன் தான்.. 6 கெட்டப்.. பரபரப்பான காட்சிகளுடன் வெளியான 'சர்தார்' டீசர்!
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வரும் கார்த்தி நடிப்பில் 22வது திரைப்படமாக உருவாகி வருவது சர்தார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான விருமன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, பொன்னியின் செல்வன் படத்தில் இவரது வந்திய தேவன் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சர்தார் படத்தின் ஆரம்ப படப்பிடிப்பு சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், கொரோனா காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் மகேஸ்வர், ஆர்ச்சா, குவாலியர் போன்ற இடங்களிலும், விருமன் படப்பிடிப்பு மதுரை, தேனி மாவட்ட பகுதியில் நடந்தது.
இந்தப் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர். இதுதவிர பிரபல நடிகை லைலா இப்படம் மூலம் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கிறார்.
தீபாவளிக்கு கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள, ‘சர்தார்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே மிகவும் வித்தியாசமானதாக இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி வேற லெவலுக்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கார்த்தி இந்த படத்தில் 6 தோற்றத்தில் நடித்துள்ளார். மிகவும் பரபரப்பான காட்சிகளுடன் வெளியாகியுள்ள டீசர் இதோ…