பிரியா அட்லீயின் வளைகாப்பிற்கு கிப்டுடன் ஆஜரான விஜய்.. வைரலாகும் வீடியோ & போட்டோஸ்
சில படங்கள் இயக்கத்திலேயே முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறியவர் அட்லீ. இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் அசிஸ்டென்ட் ஆக எந்திரன், நண்பன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். தனது முதல் படமான ராஜா ராணி படத்தில் ஆரியா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ் உள்ளிட்ட பெரிய பிரபலங்களை வைத்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார்.
அடுத்த படத்திலேயே விஜய் உடன் தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து 3 படங்களை விஜய் அவர்களுக்கு வெற்றி படங்களாக அமைத்து தந்தார். அதன்படி தற்போது, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் படத்தை இயக்க பாலிவுட் பறந்து விட்டார் அட்லீ.
இயக்குனர் அட்லீ, தனது காதல் மனைவி பிரியாவை கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி கரம்பிடித்தார். திருமணமாகி 8 ஆண்டுகளாக குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்து வந்த இந்த ஜோடி, சமீபத்தில் குட் நியூஸ் சொன்னது. அதன்படி பிரியா கர்ப்பமாக இருப்பதாக கூறி, அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் அட்லீ.
இந்நிலையில், பிரியா அட்லீயின் வளைகாப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் கலந்துகொண்டு அட்லீ - பிரியா இருவரையும் வாழ்த்தினார்.
Clear Video of #ThalapathyVijay 😍 pic.twitter.com/YRB4GucAyI
— Actor Vijay Fans Page (@ActorVijayFP) December 20, 2022
#ThalapathyVijay - Embodiment of Fitness.. ❤️🔥pic.twitter.com/gjOTp2P2hb
— VCD (@VCDtweets) December 19, 2022