லவ் டுடே இயக்குனர் பிரதீப்க்கு அடித்த ஜாக்பாட்.. ‘தலைவர் 171’ பட வாய்ப்பைவிட்ட சிபி..
தமிழ் திரையுலகை பொருத்தவரை சிவாஜி மற்றும் எம்ஜிஆர் அவர்கள் வரிசையில் நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் வைத்திருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையே. அவரது ஸ்டைல், பேச்சு, நற்குணம் என அனைத்திற்கும் ரசிகர் கூட்டம் என்ன படையே உள்ளது என்பது தான் உண்மை.
தற்போது, ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை தொடர்ந்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கவிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, டான் திரைப்படத்தின் இயக்குனரான சிபி சக்ரவர்த்தி ரஜினியை வைத்து தலைவர்171 படத்தை இயக்கவிருக்கிறார் என சொல்லப்பட்டது. இப்படத்தையும் லைகா நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.
தற்போது அதில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளெல்லாம் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ரஜினியின் பிறந்தநாள் அன்று இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கவில்லை என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
முழு கதையை கேட்டதும் ரஜினிக்கு அது திருப்தி அளிக்காததால், அவர் சிபி சக்ரவர்த்திக்கு நோ சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் மற்றுமொரு ஆச்சர்ய தகவல் என்னவென்றால், தலைவர் 171 படத்தை இயக்க சிபி சக்ரவர்த்திக்கு பதில், சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன லவ் டுடே படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை தேர்ந்தெடுத்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.