கார் கவிழ்ந்து விபத்து.. சம்பவ இடத்திலேயே நடிகை உயிரிழப்பு..

Telungu actress gayathri spot dead in an car accident

தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் படங்களிலும் ’மேடம் சர் மேடம் அந்தே’ என்னும் வெப் தொடரிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்தவர் பிரபல நடிகை காயத்ரி என்ற டோலி டி குரூஸ் (26). இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வந்தார். இதன் மூலம் தெலுங்கு ரசிகர்களிடையே இவருக்கு வரவேற்பு அதிகம்.

Telungu actress gayathri spot dead in an car accident

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காயத்ரியும் தனது நண்பர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடிவிட்டு, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது காரை அவர் நண்பர் ரத்தோட் ஓட்டி வந்தார்.

ஐதராபாத் கச்சிபவுலியில் மருத்துவமனை முன் வேலை செய்துகொண்டிருந்த பெண் மீது கார் நிலை தடுமாறி கவிழ்ந்து, சம்பவ இடத்திலேயே அந்த பெண்ணும், நடிகை காயத்ரியும் உயிரிழந்தார், ரத்தோட் படுகாயமடைந்தார்.

Telungu actress gayathri spot dead in an car accident

மது போதையில் காயத்ரியின் நண்பர் கார் வேகமாக ஓட்டியதே விபத்தின் காரணம் என கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தினர் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். நடிகை காய்த்ரியின் மரணம் தெலுங்கு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share this post