கட்டியணைக்க முயன்ற ரசிகர்.. தவறி விழுந்த பவன் கல்யாண்.. வைரலாகும் வீடியோ

Telugu star actor pawan kalyan slipped off on car

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஜனசேனா கட்சியின் தலைவரும் ஆவார். இவர் கடந்த பிப்ரவரி 20ம் தேதி மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இருக்கும் நரசாபுரத்திற்கு சென்று மக்களை சந்தித்து உரையாடி வந்தார்.

அப்போது காரின் மேற்கூரை திறந்தபடி நின்று கொண்டிருந்த பவன் கல்யாணை பார்த்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தும், அவருக்கு ஆரத்தி எடுத்தும் வந்தனர்.

காரின் மேற்கூரையில் ஏறி நின்ற பவன் கல்யாணை எதிர்பாராத விதமாக ரசிகர் ஒருவர் காரின் மீது ஏறி கட்டிப்பிடிக்க முயற்சி செய்தார். இதையடுத்து பேலன்ஸ் இழந்து பவன் கல்யாண் வழுக்கி விழுந்துவிட்டார்.

நல்ல வேளையாக காரின் கூரையில் விழுந்ததால் பெரிய அடி இருக்க வாய்ப்பில்லை. பவன் கல்யாண் விழுந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ பவன் கல்யாணுக்கு போதிய பாதுகாப்பு ஏன் இல்லை என கேட்டு வருகின்றனர்.

Share this post