நள்ளிரவு பார்ட்டி.. ரெய்டில் சிக்கிய விஜய் சேதுபதி பட நடிகை.. கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் !

Telugu famous actress niharika got arrested in drugs party by police

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மற்றும் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவி. இவரது மூத்த தம்பி நாக பாபுவின் மகள் தான் ஹீரோயினாக வலம் வரும் நடிகை நிஹாரிகா. இவர் ஹீரோயினாக ஒரு சில படங்கள் நடித்து இருக்கிறார்.

கவுதம் கார்த்திக் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ படத்தில் நடித்த நடிகை நிஹாரிகா, தற்போது போதை பார்ட்டி ஒன்றில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அங்கு drugs பயன்படுத்தப்பட்டது உறுதியாகி இருக்கிறது.

Telugu famous actress niharika got arrested in drugs party by police

ஐதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி, நள்ளிரவு பார்ட்டி நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஞாயிறன்று அதிகாலை அங்கு அதிரடியாக நுழைந்து சோதனை செய்த போலீசார், 90 இளைஞர்கள், 38 இளம் பெண்கள் மற்றும் பப் ஊழியர்கள் உள்பட சுமார் 150 பேர் சிக்கினர்.

Telugu famous actress niharika got arrested in drugs party by police

அனைவரும் தொழிலதிபர்கள் சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதிக அளவில் போதைப் பொருள் பயன்படுத்தி இருந்தனர். அதில், நடிகை நிஹாரிகாவும் ஒருவர். இதையடுத்து அங்கு இருந்த அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து கொகைன் உள்ளிட்ட போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. போலீஸ் நிலையத்தை விட்டு நிஹாரிகா வெளியே வரும்போது மீடியா மற்றும் மக்கள் அவரை சூழ்ந்துகொண்டனர். ஆனால் மீடியாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அவர் வெளியேறிவிட்டார். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this post