+2 எழுத போய் வெயிட் போட்டதால் சான்ஸ் இழந்த பிரபல தமிழ் பட இளம் நடிகை !

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக அறிமுகமான இவர், மங்கலகரமான நடிகை என்று பெயரெடுத்தவர். ஆரம்பத்தில் அடுத்த நயன்தாரா, திரிஷா என முன்னணி நடிகை என்றெல்லாம் பேசப்பட்டார்.
இவர் அறிமுகமான முதல் படமே மலையாளம் தான். அதன் பின் அங்கு பெரிய வாய்ப்பு இல்லாததால் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்த இந்த நடிகைக்கு, தமிழில் முதல் படமே வெற்றி படமாக அமைந்தது. முதல் படம் ஹிட் அடித்ததால் பல வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது.
பல வாய்ப்புகள் கதவைத் தட்டிய போதிலும், குடும்ப பாங்கான கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து, பல படங்களில் நடித்து வெற்றி பெற்றார். பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போதே நடிக்க வந்துவிட்டார். அதனால் பிளஸ் 2வாது படித்து முடிக்க வேண்டும் என பள்ளிப்படிப்பை சிறிது காலம் தொடர்ந்தார். அதனால் வீட்டில் இருந்து படிக்கவே நன்றாக ரெஸ்ட் எடுத்து சற்று உடல் எடை கூடிவிட்டார்.
இவரை ஏற்கனவே புக்கிங் செய்த தயாரிப்பாளர்கள் எல்லாம் அம்மணியை பார்த்து ஷாக் ஆகி போய்விட்டனர். ஹீரோவிற்கு அக்கா போல் ஆகிவிட்டார் என தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்ட தொடங்கிவிட்டனர்.
நடிகையை ஒப்பந்தம் செய்த மற்றொரு தயாரிப்பாளரோ இன்னும் படம் ஆரம்பிக்க சிறிது காலம் ஆகும், அதனால் மேற்படிப்பு படித்துவிட்டு வாருங்கள் என சூசகமாக கூறி அனுப்பியுள்ளார். இப்படியே உடல் எடை கூடினால், நடிப்பு மட்டுமின்றி கல்யாணத்திற்கும் பிரச்சனையாகிவிடும் என அம்மணி உடல் எடை குறைக்கும் வேலையில் இறங்கியுள்ளார். இதனால், திரையுலகில் நல்ல ஒரு கம் பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.