18 ஆண்டுகள் பிறகு 'கில்லி' பட ஷூட்டிங் ஸ்பாட்டில் த்ரிஷா.. வைரலாகும் வீடியோ

Trisha shares photo from madurai ghilli shooting spot after 18 years

தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி திரையுலகில் டாப் நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. லேசா லேசா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், எனக்கு 20 உனக்கு 18, மௌனம் பேசியதே, சாமி உள்ளிட்ட அடுத்தடுத்த வெற்றி படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். மேலும், 90ஸ்களில் கனவு கன்னியாக இருந்தவர்.

விஜய், அஜித், சூர்யா, சிம்பு, ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்தவர். 39 வயது ஆன போதிலும், இன்னும் அதே அழகுடன் மக்கள் மனங்களை கவர்ந்து வருகிறார். நடிகை திரிஷா கர்ஜணை, சதுரங்க வேட்டை 2, பொன்னியின் செல்வன், ராம், ராங்கி போன்ற படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

Trisha shares photo from madurai ghilli shooting spot after 18 years

இதனைத் தொடர்ந்து, அண்மையில், ‘தி ரோட்’ என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். கடந்த 2000ம் ஆண்டு அரங்கேறிய உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது என தகவல் வெளியானது.

புதுமுக இயக்குனர் அருண் வசீகரன் என்பவர் இயக்கும் இப்படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ஷபீர் நடிக்கிறார்.

மேலும் சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இன்று, திரிஷா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும், தெலுங்கு வெப் சீரிஸில் திரிஷா போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார். அந்த வெப் சீரிஸ் பெயர் ‘பிருந்தா’. விரைவில் இந்த வெப் சீரிஸ் வெளிவரவுள்ளது. இந்நிலையில், விஜய்யுடன் த்ரிஷா நடித்த ‘கில்லி’ திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் மதுரையில் படமாக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

Trisha shares photo from madurai ghilli shooting spot after 18 years

இந்நிலையில், கில்லி 2004ம் ஆண்டு வெளியான நிலையில், 18 ஆண்டுகள் கழித்து தற்போது த்ரிஷா மதுரை சென்று உள்ளார். அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன் எடுத்த வீடியோ மற்றும் கோவிலின் உள்ளே எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார், இந்த வீடியோவும் புகைப்படமும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது .

Trisha shares photo from madurai ghilli shooting spot after 18 years

Share this post