ஜெயலரில் ஒரு வெங்காயமும் இல்லை.. படம் ஓட காரணம் தமன்னா.. மன்சூர் அலிகான் அதிரடி..!

ஜெயிலர் படத்தில் ஒரு வெங்காயமும் இல்லை. இந்த பட வெற்றிக்கு தமன்னா தான் காரணம் என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
90களில் பிரபலமான வில்லனாக இருந்தவர் மன்சூர் அலிகான். முதல் படத்திலேயே வீரப்பன் பாத்திரத்தை ஏற்று நடிப்பில் சிறந்து விளங்கினார். அதன்பிறகு பலரையும் வியப்பில் ஆழ்த்திய வில்லத்தனமான நடிப்பால் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இருப்பினும், வெளிப்படையான பேச்சாலும், அவர் நடந்துகொண்ட விதத்திற்காக சமூக ஊடகங்களில் பிரபலமாக இருந்தார்.
தற்போது பிரபல இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ், மன்சூர் அலிகானின் ரசிகர். இவர் தனது கைதி படத்தின் கதையை மன்சூர் அலிகானை வைத்து எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேடையில் மன்சூர் அலிகானை பற்றி தொடர்ந்து பேசி வந்த லோகேஷ் கனகராஜ், தற்போது விஜய்யின் லியோ படத்தில் மன்சூருக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தார். படத்தில், விஜய்யின் லியோ கேரக்டருக்கான தொடக்க நபராக அவர் தோன்றினார். குறிப்பாக மன்சூர் அலிகானின் அறிமுகக் காட்சியில் திரையரங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், மன்சூர் அலிகான் ஹீரோவாக நடித்துள்ள படம் சரக்கு. ஜெயக்குமார் இயக்கியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தநிலையில் படத்தை சென்சாருக்கு அனுப்பினார் மன்சூர் அலிகான். படத்தைப் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் பலத்த விமர்சனங்களைத் தெரிவித்துள்ளனர். இதனால் கடுப்பான மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்தார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மன்சூர் அலிகான், “எனது இடத்தை விற்று கமர்ஷியல் படம் தயாரித்துள்ளேன். படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் அம்பானி, அதானி என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளனர். மேலும் டெல்லி என்ற பெயரையும், ஊறுகாய் மாமி என்ற வார்த்தையையும் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளனர். திருநங்கைகளைப் பற்றி ஒரு நல்ல கருத்தைச் சொல்லும் பாடலைப் பார்த்ததும் அதில் ஈர்ப்பு அதிகம். இதையும் எடு என்றார்கள்.
ஜெயிலர் காவலா பாடலில், தமன்னா தனது தொடையைக் காட்டி ரா ரா என்று அழைத்தார். நான் அதை விடவா மோசமாக எடுத்து இருக்கிறேன். அதற்கு அவர்கள் வித்தியாசமான படம் சார் என்றார்கள். தமன்னா மிகவும் கவர்ச்சியாக இருப்பது ஏன் தணிக்கை அதிகாரிகளுக்குத் தெரியவில்லை? ஜெயிலரில் ஒரு வெங்காயமும் இல்லை. தமன்னா பாடிய அந்த பாடல் படத்தை ஓட வைத்தது. சரக்கு படம் என்பது நல்ல நோக்கத்துடன் எடுக்கப்பட்ட படம். பத்திரிகையாளர்களாகிய நீங்கள் அதை மக்களிடம் சேர்க்க வேண்டும்,’’ என்றார்.