ட்ரெண்டாகும் கரு கரு கருப்பாயி... லியோவால் வைப் செய்யும் ரசிகைகள்..!
விஜய்யின் லியோ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், ரசிகர்களைக் கவரும் பாடல் எதுவும் இல்லை என்று ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதாவது ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் லியோவுக்கு போட்டியாக பார்க்கப்பட்டது. லியோ, ஜெயிலர் ஆகிய இரண்டு படங்களுக்கும் அனிருத் இசையமைத்துள்ளார்.
அதுவும் ஜெயிலரில் ஒரு பாடல் ரகளையாக்கியது அந்த பாடல் மிகவும் ட்ரெண்டி ஆனது. இதையடுத்து, ஜெயிலரில் முதல் பாடலாக வெளியான கவாலா பாடல் எங்கும் வைரலானது. இந்தப் பாடலுக்கு தமன்னாவின் நடனம் வேறு லெவலுக்கு இருந்தது முக்கியக் காரணம்.
ஆனால், லியோ படத்திற்கு அனிருத்தை மோசமாக இசை அமைத்து இருந்தததாக, விஜய் ரசிகர்கள் திட்ட ஆரம்பித்துள்ளளர். இந்நிலையில் இப்படத்தில் கூடுதலாக மூன்று பாடல்கள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக கருகரு கருப்பாயி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.
அதாவது பிரபுதேவாவின் நடனத்தில் வெளியான இந்தப் பாடல் தற்போது விஜய்யின் நடனத்தில் இணையத்தில் கலக்கி வருகிறது. இந்த நடனத்திற்குப் பிறகு மாஸ் ஆக்ஷன் காட்சிகள் இருந்தன. இது தவிர தாமரை பூவிக்கும் தண்ணிக்கும் என்ற பாடலும் லியோ படத்தில் இடம்பெற்றது.
கடைசியாக நான் பொல்லாதவன் பாடல் சேர்க்கப்பட்டது. இயக்குனர் லோகேஷ் எப்போதுமே தனது படங்களில் பழைய பாடல்களை போடுவதை வழக்கமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.