மேடையில் விஜய் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட தமன்னா.. தீயாய் பரவும் வீடியோ !
கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வில்லி கதாபாத்திரத்தில் தோன்றி அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, வியாபாரி மற்றும் கல்லூரி போன்ற திரைப்படங்களில் நடித்தார். கல்லூரி திரைப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பு, மேக் அப் இன்றி சாதாரண கல்லூரி மாணவியாக வாழ்ந்திருப்பார்.
அதனைத் தொடர்ந்து, படிக்காதவன், அயன், அனந்த தாண்டவம், கண்டேன் காதலை, ஆக்ஷன், வீரம், சுறா போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி களிலும் நடித்த இவருக்கு, ரசிகர் பட்டாளம் ஏராளம். தமிழ் மொழியில் விஜய், அஜித், சூர்யா, சிம்பு,கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.
நிறைய வெற்றி திரைப்படங்களில் நடித்த இவர், நவம்பர் ஸ்டோரி போன்ற படங்களில் நடித்தார். திரைப்படங்கள், வெப் சீரீஸ், மியூசிக் ஆல்பங்கள் என கவனம் செலுத்தி வரும் தமன்னா, இடைவிடாது தனது கவர்ச்சி புகைப்படங்களையும் இணையத்தளத்தில் பதிவிட்டு அதனை ட்ரெண்ட் செய்து வருகிறார். வெப்சீரிஸ் இல் நடித்து வரும் நடிகை தமன்னா மறுபக்கம் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில், இவர் நடிப்பில் 11th hour வெப் சீரீஸ் வெளியானது. நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் தமன்னா கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நடிகை தமன்னா அண்மையில் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்றில் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு செம குத்தட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Tamannaah Grooving Vaathi Coming ❤️🔥 @tamannaahspeaks
— Filmy Kollywud (@FilmyKollywud) October 27, 2022
pic.twitter.com/GZuciJNDFM