ஓவர் ஆக்ஷன் செய்து மாட்டிக்கொண்ட செரீனா? சீரியல் மிஞ்சி இருக்கு.. வெளியான குறும்படம் !
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சண்டைக்கு கொஞ்சம் கூட குறைச்சல் இல்லாமல் அரங்கேறி வருகிறது. தனலட்சுமி, அசீம், விக்ரமன் உள்ளிட்டோர் பெயர் எப்படியாவது வெளியே வந்து விடுகிறது. இந்த வாரம் பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த டாஸ்கை கடந்த சீசனிலேயே பிக் பாஸ் கொடுத்து இருந்தார். அப்போதே பலவிதமான கலவரங்கள் ஏற்பட்டிருந்தது, அதேபோல் இந்த பலவிதமான பொம்மை டாஸ்க் கொடுத்தவுடன் போட்டியாளர்கள் மத்தியில் கலவரம் தொடங்கி இருக்கிறது. இதனால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டும், மோதியும் விளையாடி வருகிறார்கள்.
போட்டியின் போது, ஷெரினா கீழே விழுந்து தலையில் அடிபட்டது என்று கூறியவுடன் போட்டியாளர்கள் சிலர் ஷெரினாவை காப்பாற்ற போட்ட காட்சிகள் எல்லாம் வேற லெவலில் இருந்தது. இதற்கு காரணம் தனலட்சுமி தான் என்று அசீம், தனலட்சுமியை பயங்கரமாக திட்டி இருக்கிறார். சிலரும் தனலட்சுமி தான் இதற்கு காரணமாக இருப்பாரோ? என்றெல்லாம் கூறுகிறார்கள்.
ஆனால், தனலட்சுமி ஓவியாவை போல குறும்படம் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என கூறுகிறார். என் மீது தவறு இருந்தால் நான் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கிறேன் என்று தெளிவாக பேசி இருந்தார். இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் ஷெரினா கீழே விழவில்லை என்றும் அவர் தலையில் அடிபடவில்லை, அவர் போட்டதெல்லாம் டிராமா என்று வீடியோ வெளியிட்டு இருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் நடன டாஸ்க்கில் கலந்து கொள்வதை தவிர்க்கவும் இதே போல செரினா ஒரு டிராமாவை போட்டு இருக்கிறார். இப்படி ஷெரினா பிற போட்டியாளர்களை ஏமாற்றி நடத்தி வருவதை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வீடியோவாக ஷேர் செய்து இருக்கிறார்கள். அதிலும் சிலர், சீரியல் சீன்களை மிஞ்சும் அளவிற்கு ஷெரினா நடித்திருக்கிறார் என்றும் கலாய்த்து வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த வார இறுதியில் கமல்ஹாசன் இது குறித்து என்ன சொல்லப் போகிறார்? என்று எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
This has to be the most amazing performance ever by #Sherina. Also why is #Manikandan suddenly acting so feral. #BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/4V7SbFdpiR
— Singoolarity (@singoolarity) October 27, 2022
So many #Sherina references today
— I'm Bigg Boss (@Rock96514812) October 26, 2022
But this one is my favorite.#BiggBossTamil #BiggBossTamil6 pic.twitter.com/WaxlkFt267
Today Episode Vera Level Troll!
— பாமரன் பார்வை 🎬 🎥✍️🎭 (@pamaraparvai) October 26, 2022
I Like This Clippings!😂😂😂👌👌👌👍👍👍#BiggBossTamil6 #BiggBossTamil #Azeem #Dhanalakshmi #Sherina #Ayesha pic.twitter.com/15n5UFIJV3