எதற்கும் துணிந்தவன் ப்ரோமோஷன் பேச்சில் மறைமுகமாக விஜய் குறித்து பேசிய சூர்யா ! வைரலாகும் வீடியோ

Surya speech about vijay in etharkum thuninthavan promotion stage

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் போன்ற பலர் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.

Surya speech about vijay in etharkum thuninthavan promotion stage

மேலும், பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுபவர்களை குறி வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், தமிழ் என ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ளது. பல்வேறு தடங்கல் மற்றும் எதிர்ப்புகள் கிளம்பிய போதும் தற்போது திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது.

இப்படத்தின் ப்ரோமோஷன் அடுத்தடுத்து நடைபெற்று வரும் நிலயில், கேரளாவில் நடந்த இந்த படத்தின் ப்ரோமோஷனில் பேசிய சூர்யா, விஜய் குறித்து பேசிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Surya speech about vijay in etharkum thuninthavan promotion stage

கேரளாவில் ப்ரோமோஷனில் கலந்து கொண்ட சூர்யா மேடையில் பேசியது, நேருக்கு நேர் படத்தின் போது ரசிகர்கள் மற்றொரு நடிகருக்கு கொடுத்த ஆதரவு எனக்கு கிடைக்கவேண்டும் ஆசைப்பட்டேன்.

Surya speech about vijay in etharkum thuninthavan promotion stage

பல வருடங்களுக்கு பிறகு தற்போது அதே ஆதரவு எனக்கு கிடைப்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறியிருந்தார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Surya speech about vijay in etharkum thuninthavan promotion stage

இதன் மூலம் நேருக்கு நேர் படத்தில் சூர்யாவுடன் விஜய் நடித்து இருந்தார். அப்போது ரசிகர்கள் எல்லோரும் விஜய்க்கு ஆதரவு கொடுத்து வந்த சமயம், சூர்யா புதுமுகம். விஜய் உடைய பெயரைத் தான் சொல்லாமல் சூர்யா கூறி இருக்கிறார். மேலும், இவர்கள் இருவரும் இணைந்து 1997ம் ஆண்டு நேருக்கு நேர் என்ற படத்திலும், 2001ம் ஆண்டு பிரண்ட்ஸ் படத்திலும் நடித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post