அடடே.. கணிதத்தில் 100.. அறிவியலில் 98.. சூர்யா - ஜோதிகா மகள் தியாவின் 10ம் வகுப்பு மதிப்பெண் இதோ!

Surya jyothika daughter diya 10th marks getting viral on social media

நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலம் முதல் சில திரைப்படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் காதல் கொண்ட பிரபல ஜோடி சூர்யா - ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர் போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்தனர்.

Surya jyothika daughter diya 10th marks getting viral on social media

2006ம் ஆண்டு இவர்கள் திருமணத்திற்கு முன்னர் இணைந்து நடித்து வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் சில்லுனு ஒரு காதல். இருவீட்டாரின் பெயரில் சம்மதம் பெற்று திருமணம் செய்தனர்.

Surya jyothika daughter diya 10th marks getting viral on social media

இவர்களுக்கு தேவ் மற்றும் தியா என்ற குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு பெரும்பாலும் குடும்ப பாங்கான ரோல் மட்டும் ஏற்று நடித்து வருகிறார் ஜோதிகா.

Surya jyothika daughter diya 10th marks getting viral on social media

சூர்யாவின் குடும்பமே பாதி திரையுலகத்தை சார்ந்து இருப்பவர்கள் என்றாலும், தங்களது குழந்தைகளை இதுவரை சினிமாவில் நடிக்க வைக்கவில்லை. இருவரும் படிப்பில் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர். சூர்யாவின் மகள் தியா தற்போது 10ம் வகுப்பு முடித்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

Surya jyothika daughter diya 10th marks getting viral on social media

அதில் சூர்யாவின் மகள் தியா, தமிழில் 95 மதிப்பெண், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண், கணிதத்தில் 100 மதிப்பெண், அறிவியலில் 98 மதிப்பெண், சமூக அறிவியலில் 95 மதிப்பெண் பெற்றும் பர்ஸ்ட் கிளாஸில் பாஸ் செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Surya jyothika daughter diya 10th marks getting viral on social media

எதிர்பார்த்ததை விட மகள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளதால் சூர்யாவும் அவரது குடும்பத்தினரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்களாம். பல ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கல்விக்கும் அவர்களது மேல் படிப்பிற்கும் உதவி வருபவர் சூர்யா. அவரின் மகள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Share this post