'டான் - கட்டப்பா' காம்போவில்.. கலகலப்பான வீடியோவுடன் வெளியான Prince பட அறிவிப்பு !

Sk20 prince release date announcement video getting viral on social media

விஜய் தொலைக்காட்சியில் சாதாரணமாக தொகுப்பாளராக பணியாற்றி தனது நகைச்சுவை பேச்சுகளால் மக்கள் மனதில் நின்றவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

சின்னத்திரையில் செம பேமஸ் ஆன இவர், பல பிரபல நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் விழாக்களிலும் தொகுப்பாளராக இருந்துள்ளார்.

Sk20 prince release date announcement video getting viral on social media

இதன் நடுவே, ஒரு சில குறும்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், மெரினா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 3 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Sk20 prince release date announcement video getting viral on social media

அதன் பின்னர், மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்கள் பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும், எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், கனா, டாக்டர் என தொடர் வெற்றிப்படங்களில் நடித்தார்.

தற்போது, இவர் நடிப்பில் டான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அயலான் திரைப்படம் நிலுவையில் உள்ளது. நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர்.

Sk20 prince release date announcement video getting viral on social media

மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து பெரும் அந்தஸ்தை எட்டியுள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் படியான திரைப்படங்களை தற்போது வரை தந்து வருகிறார்.

Sk20 prince release date announcement video getting viral on social media

இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்துள்ள படம் டான். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சிவாங்கி, பாலசரவணன், ஆர் ஜே விஜய் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Sk20 prince release date announcement video getting viral on social media

அப்பா சென்டிமென்ட், காலேஜ் கலாட்டா, SKவின் காமெடி, காதல் என அனைத்தையும் அருமையாக டெலிவெரி செய்துள்ளார் இயக்குனர் சிபி. பக்கா பாசிட்டிவ் ரிவியூ பெற்று வரும் டான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Sk20 prince release date announcement video getting viral on social media

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் SK20. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படத்தின் இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் சத்யராஜ், ரித்து வர்மா, உக்ரைன் மாடல் அழகி மரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Sk20 prince release date announcement video getting viral on social media

கடந்த ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தில் சில காட்சிகள் புதுச்சேரியில் படமாக்கப்பட்டு வருகிறது. அப்போது ரசிகர்கள் அவரை சூழ்ந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.

Sk20 prince release date announcement video getting viral on social media

SK20 படத்தில் சிவகார்த்திகேயன் பள்ளி ஆசிரியராக நடிக்கிறார் என்றும், இப்படம் ஒரு காதல் நகைச்சுவை படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இப்படத்தின் பெயர் பிரின்ஸ் என பர்ஸ்ட் லுக்குடன் படக்குழு அறிவிப்பு வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. சிவகார்த்திகேயன் படத்தின் ஒரு நடிகையான உக்ரைன் மாடல் மரியாவுடன் இருக்கும் 2வது லுக்கும் வெளியானது.

Sk20 prince release date announcement video getting viral on social media

இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு ஜாலியான உரையாடல் வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது.

Share this post