படுக்கைக்கு அழைத்த பேராசிரியர்.. ஸ்க்ரீன்ஷாட்டை அம்பலப்படுத்திய மாஸ்டர் பட நடிகை !

Super singer fame soundarya gets unwanted messages where she shared screenshot on media

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தவர் நடிகை செளந்தர்யா. இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் விக்னேஷ் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்தார். மேலும், நிறைய குறும்படங்களில் நடித்தார்.

Super singer fame soundarya gets unwanted messages where she shared screenshot on media

பேஸிக்காக பின்னணி பாடகியின் பின்னணி வைத்திருக்கும் செளந்தர்யா, கடந்தாண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.

இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் செளந்தர்யா, அதில் புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்கள் பதிவிடுவது வழக்கம். இந்நிலயில், ஒரு கல்லூரி பேராசிரியர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக குறிப்பிட்டு இன்ஸ்டா ஸ்க்ரீன்ஷாட் பதிவிட்டுள்ளார்.

அந்த நபரின் பக்கத்தை பார்த்ததில் அவர் மதுரையை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் என காட்டுவதாக தெரிவித்திருந்தார். மேலும் அவரிடம் பயிலும் மாணவிகள் பாதுகாப்பாக இருங்கள் என்பதை போல பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி அந்த நபரை பிளாக் செய்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Super singer fame soundarya gets unwanted messages where she shared screenshot on media

Share this post