'அனகோண்டாபுரம்'ஆ?.. இத பாத்த பேய் படம் மாதிரி இல்லையே டா..' ஓ மை கோஸ்ட் ட்ரைலர் இதோ!
இயக்குனர் யுவன் இயக்கத்தில் சன்னி லியோன், தர்ஷா குப்தா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ஓ மை கோஸ்ட். இப்படத்தில் நடிகை சன்னி லியோன் ஹீரோயினியாக நடிப்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. யோகி பாபு, சதிஷ், ரமேஷ் திலக், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செம பிரம்மாண்டமாக நடந்தது. தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. எதிர்பார்த்ததை விட ட்ரைலர்’ஏ செம தூக்கலா இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Share this post