அட அட அட.. இதத்தான் எதிர்பாத்தோம்.. சிம்பு - திரிஷா குறித்து வெளியாகவிருக்கும் குட் நியூஸ்.. குஷியில் ரசிகர்கள்!
காதல் திரைப்படங்கள் என்றாலே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் இயக்குனர் கவுதம் மேனன். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் பணியாற்றியுள்ளார். மின்னலே, வாரணம் ஆயிரம் தொடர்ந்து 2010ம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் இவருக்கு பெரும் அங்கீகாரத்தை பெற்றுத்தந்து இளசுகளின் பேவரைட் இயக்குனராக மாறிவிட்டார்.
சிம்பு, த்ரிஷா, கணேஷ், நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் பெரும் வெற்றி பெற்று, தற்போது வரை இளசுகளின் பேவரைட் ஆக உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் செம ஹிட்.
பொதுவாக ஒரு படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகிவிட்டால், அதன் 2ம் பாகம் குறித்த கேள்வி ரசிகர்களிடையே எழத்தொடங்கிவிடும். அந்த வகையில், 12 வருடங்கள் ஆகியும் விண்ணைத்தாண்டி வருவாயா 2 படம் குறித்த கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டு தான் இருக்கிறது.
கொரோனா ஊரடங்கு சமயத்தில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தை இப்படத்தின் தொடர்ச்சியாக எடுத்து வெளியிட்டார் கவுதம் மேனன். இதன்பின்னர் பல்வேறு படங்களில் அவர் பிசியானதால் 2ம் பக்கம் குறித்த எந்த பேச்சும் இல்லை.
தற்போது, காதல் ஜோடிகளாக நடித்திருந்த சிம்புவும், திரிஷாவும் தற்போது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் சிம்பு - திரிஷா கூட்டணி குறித்த குட் நியூஸுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைப்பார் என கூறப்படுகிறது. இந்த தகவல் இளசுகளிடையே ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.