'என்னடா சன் டிவி சீரியல்ன்னு சொன்னாங்க.. நீங்க இப்டி பண்றீங்க..' பரபரப்பை கிளப்பிய கண்ணான கண்ணே சீரியல் ப்ரோமோ

வெள்ளித்திரையை மிஞ்சும் அளவிற்கு சின்னத்திரை தொடர்கள் ஒரு காலத்தில் வரவேற்பை அள்ளி கொண்டு வந்தது. இதில், தமிழ் சின்னத்திரை வரலாற்றில் வருடக் கணக்காக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சேனல் சன் தொலைக்காட்சி. இதில் சித்தி, மெட்டி ஒலி, அண்ணாமலை, சின்ன பாப்பா பெரிய பாப்பா என பல தொடர்கள் இல்லத்தரசிகள் மட்டுமல்லாது அனைத்து வயதினரும் ஆண்களும் ரசித்து பார்க்கும் வண்ணம் அமைந்தது.
காலை 10 மணிக்கு தொடங்கி இரவு வரை சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பாகும். வீட்டில் இருக்கும் பெண்மணிகளுக்கு இந்த தொலைக்காட்சி தொடர்களே முக்கிய பொழுதுபோக்காக மாறி இருந்தது. கடந்த ஒரு 5 வருடங்களாக விஜய் டிவி , சன் டிவிக்கு போட்டியாக களமிறங்கிவிட்டது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். இதனால், சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்கள் அவ்வப்போது டிஆர்பி சண்டையில் இடம்பெறுவது வழக்கம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல பிரபல தொடர்களில், கண்ணான கண்ணே தொடர் மக்கள் வரவேற்பு அதிகமாக பெற்று வருகிறது. சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் அப்பா-மகள் இடையேயான பாச போராட்டத்தை மையமாக கொண்ட தொடர். தெலுங்கில் ‘பௌர்ணமி’ என்ற டைட்டிலில் ஒளிபரப்பாகி வந்த இத்தொடர் தமிழில் ‘கண்ணான கண்ணே’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியல் 2020ம் ஆண்டு நவம்பர் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் ராகுல் ரவி, நிமேஷிகா ராதாகிருஷ்ணன், பிரித்திவிராஜ், பிரீத்தி சஞ்சீவ், அக்ஷிதா உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த தொடரில் பிரீத்தி சஞ்சீவ் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து இருந்தார். தற்போது சீரியல் பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சன் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் கண்ணான கண்ணே சீரியலின் புரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
அதில், ஹீரோ- ஹீரோயின் இருவரும் மிக நெருக்கமாக இருப்பது போன்று ரொமான்ஸ் பாடலுக்கு நடனம் ஆடி இருக்கும் காட்சிகள் உள்ளது . இந்த ப்ரோமோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இதை பார்த்த 90ஸ் கிட்ஸ்கள் பலரும், ஏன்டா டேய் எங்களுக்கெல்லாம் கோலங்கள் ஓலங்கல்ன்னு போட்டுட்டு இப்படியெல்லாம் பண்றீங்களா என்று புலம்பித் தள்ளுகிறார்கள்.
ஃபேமிலி சீரியல்’ஆ இது ? நாங்க சீரியல் பார்த்த காலத்தில் கோலங்கள், மெட்டி ஒலி, சித்தி என்று சென்டிமென்ட் சீரியல்களை போட்டுட்டு இப்ப மட்டும் இப்படி லூட்டி அடிக்கிறார்களே நியாயமா? என்றெல்லாம் 90கிட்ஸ் சீரியல் ரசிகர்கள் பொங்கி எழுந்து கொந்தளிப்பில் கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.
ஏன்டா டேய்… எங்களுக்கெல்லாம் கோலங்கள் ஓலங்கள்னு போட்டுட்டு… இப்ப 😂
— Jackson durai👮 (@mogu24) July 12, 2022
இது 90கிட்ஸ் உலாவும் பகுதி இதுபோன்ற வீடியோகளை தவிர்க்கவும்
— நவீன் (@naveenpic) July 11, 2022
Pls remove this video @Twitter
6வருஷமா கோலங்கள் பாத்த எங்கள ஏமாத்திபுட்டல .... 😢🚶🏿 pic.twitter.com/aBiNBQ8xMH
— Manoj (@otakugangu) July 12, 2022
அடேய் 20 வருசம் முன்ன நீங்க போட்ட மிட்நைட் மசாலாலையே இவ்வளவு பிட்டு இல்லடா .. என்னடா இப்படி இறங்கிடிங்க 🤦🏽♂️🤦🏽♂️
— Blue coffee (@frappecousin) July 11, 2022