முக்கிய சேனலை நிறுத்தும் சன் நெட்வொர்க்? ரசிகர்கள் அதிர்ச்சி.. ஏன் நல்லா தான போயிட்டு இருந்துச்சு!
சின்னத்திரை, சீரியல், ஸ்பெஷல் ஷோ, பிரபலங்கள் பேட்டி என ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த சேனல் சன் டிவி. இதன் நெட்வொர்க்கில் கே டிவி, சன் மியூசிக், சன் நியூஸ், ஆதித்யா டிவி, சுட்டி டிவி என பல சேனல்கள் தமிழில் உள்ளது. இதே போல தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் சேனல்கள் இருக்கிறது.
தற்போது, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் போன்ற சேனல்களின் போட்டியால், சன் டிவி கடும் போட்டியினை சந்தித்து டிஆர்பியில் வெற்றி பெற போராடி வருகிறது. ஒரு சில சீரியல் தொடர்கள் மூலம் சின்னத்திரையில் சன் டிவி டிஆர்பியில் முன்னணியில் இருக்கிறது.
இந்நிலையில், குழந்தைகளுக்கான சுட்டி டிவி விரைவில் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
சுட்டி டிவியில் டோரா - புஜ்ஜி, பென்குயின் மடகாஸ்கர், ஜாக்கி சான் போன்ற பல நிகழ்ச்சிகள் இன்றைய 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் ஆக இருந்து வந்தது.