பிக் பாஸ் வீட்டில் அமானுஷ்யம் ? இரவில் நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி.. பதறிய போட்டியாளர்கள் !
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், சீரியல் நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, சின்னத்திரை நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, மாடல் மற்றும் கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, சன் மியூசிக் தொகுப்பாளர் வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட டாஸ்க் விதிமுறையின்படி போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீவா, குயின்ஸி, ஜனனி மற்றும் விக்ரமன் உள்ளிட்டோர் வீட்டிற்கு வெளியே தூங்கினார்கள். இரவு முழுவதும் கொசுக்கடியால் அவதிப்பட்டு தூங்காமல் எப்போது விடியும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதே சமயம் வீட்டிற்குள் போட்டியாளர்கள் நன்றாக உறங்கி கொண்டிருந்தார்கள். ஆனால் அதில் ரச்சிதா மட்டும் சீக்கிரமாகவே எழுந்துவிட்டார்.
வெளியே வந்த ரச்சிதாவிடம் வெளியேப்படுத்திருந்த 4 பேரும், ஏன் இவ்வளவு சீக்கிரமாக எழுந்துவிட்டீர்கள் என்று கேட்க, அதற்கு ரச்சிதா என்னால் தூங்க முடியவில்லை, தூங்கும் பொழுது தீடீரென சத்தங்கள் வருகிறது. ஜி.பி. முத்து அண்ணா சிரிப்பது போல் சத்தம் கேட்டது. எழுந்து பார்த்தேன், அவர் நன்றாக தூங்கி கொண்டிருந்தார்.
அதே போல் மற்றவர்களின் சத்தமும் கேட்டது. மீண்டும் எழுந்து பார்த்தேன் அனைவரும் தூங்கி கொண்டு தான் இருந்தார்கள். இதனால் தான் என்னால் நன்றாக தூங்க முடியவில்லை என்று கூறியுள்ளார். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் அமானுஷ்யம் இருக்கிறது என்று செய்திகள் ஊடகங்களில் உலா வரும் நிலையில் ரச்சிதா இப்படி கூறியுள்ளது அனைவரின் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ரச்சிதா இப்படி கூறியவுடன் நீவா, குயின்ஸி, ஜனனி மற்றும் விக்ரமன் ஆகியோர் சற்று பதறிப்போனார்கள்.