என்னது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் Last படமா? இயக்குனர் இவர் தானாம்.. வெளியான அதிர்ச்சி தகவல் !
அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’. சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
ஜெயிலர் படம் இந்த ஆண்டு தீபாளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2023ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் படம் சிறை மற்றும் சிறைக்கைதிகள் சம்பந்தப்பட்ட கதை எனவும், அதனால் தான் ஜெயிலர் என்று தலைப்பு வைத்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஓய்வுபெற்ற ஜெயிலராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு சிறையில் தான் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்க உள்ள 2 படங்களின் தயாரிப்பு உரிமத்தை பொன்னியின் செல்வன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக மொத்தமாக ரஜினி கால்ஷீட் வழங்கி உள்ளாராம்.
ஜெயிலர் படத்தில் நடித்து முடித்த பின், ரஜினியின் 170 மற்றும் 171வது படத்தை லைகா தயாரிக்க உள்ளது. ரஜினியின் 170வது படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான டான் படத்தை இயக்கியவர். இப்படத்தையும் லைகா நிறுவனம் தான் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ரஜினியின் 171வது படத்தை இயக்க இரு இயக்குனர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதில் ஒருவர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா மற்றொருவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. இவர்கள் இருவரில் ரஜினி யாருக்கு வாய்ப்பளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதன் நடுவே, ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் படம் தான் நடிகர் ரஜினிகாந்தின் கடைசி படம் என்றும் அதன் பிறகு அவர் எந்த படங்களிலும் நடிக்க மாட்டார் என பரபரப்பான அதிர்ச்சி தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.