அஜித்துடன் பாவனி - அமீர்.. பிக்பாஸ் பிரபலங்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட செல்ஃபி.. வைரலாகும் போட்டோஸ் !

ajith kumar selfie with amir pavni and cibi photos trending

தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.

ajith kumar selfie with amir pavni and cibi photos trending

தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.

ajith kumar selfie with amir pavni and cibi photos trending

அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை. தற்போது, AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் கழித்து அஜித் ‘துணிவு’ படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து, அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியில் AK62 உருவாகவுள்ளது.

ajith kumar selfie with amir pavni and cibi photos trending

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் வைரலானது. அஜித் நடிக்கும் துணிவு படம் ஒரு வங்கி கொள்ளை சம்பந்தமான கதை என்ற தகவல் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த கதை 1985ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கதையாம்.

ajith kumar selfie with amir pavni and cibi photos trending

ஏற்கெனவே படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி நடிப்பது குறித்து தகவல்கள் வெளியான நிலையில், இதனிடையில் பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவ்னி, சிபி போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இது உண்மை என நிரூபிக்கும் விதமாக அஜித் இந்த பிரபலங்களுடன் பாங்காங்கில் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ajith kumar selfie with amir pavni and cibi photos trending

ajith kumar selfie with amir pavni and cibi photos trending

ajith kumar selfie with amir pavni and cibi photos trending

ajith kumar selfie with amir pavni and cibi photos trending

Share this post