'ரூம் போட்டு யோசிப்பாங்களோ?' செம நகைச்சுவையான 'வாலி' பட பாடல் வீடியோவை வெளியிட்ட சிம்ரன்!

Simran shares vaalee movie song video getting viral on social media

ஹிந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சிம்ரன். இதனைத் தொடர்ந்து, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருக்கு தமிழ் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கிய நிலையில், ஒன்ஸ் மோர் மற்றும் விஐபி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் பேவரைட் ஆக மாறினார்.

Simran shares vaalee movie song video getting viral on social media

பின்னர், நேருக்கு நேர், நட்புக்காக, அவள் வருவாளா என பல திரைப்படங்களில் அதிலும் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். விஜய், அஜித், கமல் ஹாசன், அர்ஜுன், பிரபு தேவா என டாப் ஹீரோக்களுடன் நடித்து நிறைய வெற்றி படங்களை தந்துள்ளார்.

Simran shares vaalee movie song video getting viral on social media

இவரது ஸ்லிம் உடல்வாகு, அழகான முகத்தோற்றம் காரணமாக பல வருடங்களாக டாப் வரிசையில் கொண்டாடப்பட்டவர். தெலுங்கு மொழியிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இடுப்பழகி சிம்ரன் என சொல்லும் அளவிற்கு மிடுக்கான ஸ்லிம் இடுப்புக்கு பெயர் போனவர்.

Simran shares vaalee movie song video getting viral on social media

தற்போது, சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது நடுவராகவும் ஸ்பெஷல் கெஸ்ட் ஆகவும் வரும் சிம்ரன், துப்பறிவாளன், சீமராஜா, பேட்ட உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகை சிம்ரன் தற்போது அந்தகன், கேப்டன், துருவநட்சத்திரம், வணங்காமுடி ஆகிய நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

Simran shares vaalee movie song video getting viral on social media

நீண்ட இடைவெளிக்கு பிறகு, ராக்கெட்ரி படத்தில் மாதவன் ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு கதையை மையமாக வைத்து எடுத்துள்ள படம் தான் ராக்கெட்ரி. நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்ரன் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிகர் ஷாருக்கான் மற்றும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

Simran shares vaalee movie song video getting viral on social media

இந்நிலையில், இவர் தற்போது ஷேர் செய்த வீடியோ ஒன்று செம வைரலாகி வருகிறது. அஜித் டபுள் ரோலிலும், சிம்ரன் நாயகியாகவும் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய திரைப்படம் ’வாலி’. இப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டானது.

Simran shares vaalee movie song video getting viral on social media

‘வாலி’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘நிலவை கொண்டு வா’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த பாடலின் காமெடி வீடியோ ஒன்று இணையதளங்களில் கடந்த சில நாட்களாக வைரலாகி வருகிறது.

Simran shares vaalee movie song video getting viral on social media

இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள சிம்ரன், ‘திங்கட்கிழமை காலை எழுந்தவுடன் இந்த பாடலை கேட்டு சுறுசுறுப்பானேன்’ என்று பதிவு செய்துள்ளார். மேலும் அவர் ’ரூம் போட்டு யோசிப்பாங்களோ’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post