Viral Video: 1000 அடியில் சிம்புவுக்கு மெகா போஸ்டர்.. 'மஹா' பட ரிலீசுக்காக சிம்பு ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி செயல் !
டி ராஜேந்தர் அவர்களின் மகனான சிம்பு குழந்தை நட்சத்திரம் முதல் நடித்து வருபவர். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், காதல் அழிவதில்லை, தம், அலை தொடங்கி நிறைய படங்களில் நடித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன், வானம் போன்ற படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.
சில பல பிரச்னைகளால் உடல் எடை கூடி ஆளே வித்தியாசமாக மாறிய சிம்பு, உடல் எடையை குறைத்து மாநாடு படத்தில் செம பிட்டாக இருப்பதை பார்த்து பலரும் ரசித்தனர். அப்படம் பெரும் கம்பேக் ஆக அவருக்கு அமைந்தது.
இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த சிம்பு, சின்னத்திரையிலும் பிரபலம் ஆனார் . தற்போது, இவர் நடித்து வந்த வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்திற்காக நடிகர் சிம்பு 20 கிலோ வரை உடல் எடையை குறைத்து வித்தியாசமான கெட் அப்பில் நடித்துள்ளார். இப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ஒபிலி என் கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடிகர் சிம்பு நடித்து வந்தார். இப்படத்தில் நடிகர் சிம்பு கேங்ஸ்டராக நடிக்கிறார். மேலும் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மிகவும் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்த சிம்பு, பத்து தல படத்துக்காக உடல் எடையை அதிகரிக்க மீண்டும் ரிஸ்க் எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது.
பத்துதல திரைப்படம் டிசம்பர் மாதம்14ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. மேலும், வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஹன்சிகாவின் 50வது படமான ’மஹா’ படத்தில் சிம்பு முதலில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தான் இருந்தது. ஆனால் அதன் பின்னர் சிம்புவின் ஆர்வத்தை கண்ட இயக்குனர் இந்த படத்தில் சிம்புவுக்கு முக்கிய கேரக்டராக மாற்றினார். இந்நிலையில், வரும் 22ம் தேதி உலகம் முழுவதும் மஹா திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சிம்பு ரசிகர்கள் 1000 அடியில் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கோலிவுட் திரையுலகில் முதல் முதலாக ஒரு நடிகருக்கு 1000 அடியில் ரசிகர்கள் பேனர் அடித்து இருப்பது இதுவே முதல் முறை என்பதும் இந்த சாதனையை மதுரை சிம்பு ரசிகர்கள் செய்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Maha #STR 😎🔥 pic.twitter.com/mpwZxFb9Q1
— Cinema Updates (@mastervijay2020) July 18, 2022