‘பத்து தல’ படத்துக்காக சிம்பு எதிர்கொள்ளும் மிகப்பெரிய ரிஸ்க்.. ஏன் இப்டி கஷ்டப்படுத்திக்கறீங்க.. புலம்பும் பேன்ஸ் !

Simbu is going to increase weight for pathu thala film again and to reduce for corona kumar

டி ராஜேந்தர் அவர்களின் மகனான சிம்பு குழந்தை நட்சத்திரம் முதல் நடித்து வருபவர். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், காதல் அழிவதில்லை, தம், அலை தொடங்கி நிறைய படங்களில் நடித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன், வானம் போன்ற படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.

Simbu is going to increase weight for pathu thala film again and to reduce for corona kumar

சில பல பிரச்னைகளால் உடல் எடை கூடி ஆளே வித்தியாசமாக மாறிய சிம்பு, உடல் எடையை குறைத்து மாநாடு படத்தில் செம பிட்டாக இருப்பதை பார்த்து பலரும் ரசித்தனர். அப்படம் பெரும் கம்பேக் ஆக அவருக்கு அமைந்தது.

Simbu is going to increase weight for pathu thala film again and to reduce for corona kumar

இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த சிம்பு, சின்னத்திரையிலும் பிரபலம் ஆனார் . தற்போது, இவர் நடித்து வந்த வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது.

Simbu is going to increase weight for pathu thala film again and to reduce for corona kumar

ஏ.ஆர்.ரகுமான் இசையில் கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்திற்காக நடிகர் சிம்பு 20 கிலோ வரை உடல் எடையை குறைத்து வித்தியாசமான கெட் அப்பில் நடித்துள்ளார். இப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Simbu is going to increase weight for pathu thala film again and to reduce for corona kumar

ஒபிலி என் கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடிகர் சிம்பு அடுத்ததாக நடிக்க தயாராகி வருகிறார். இப்படத்தில் நடிகர் சிம்பு கேங்ஸ்டராக நடிக்கிறார். மேலும் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Simbu is going to increase weight for pathu thala film again and to reduce for corona kumar

இப்படத்திற்காக நடிகர் சிம்பு மீண்டும் உடல் எடையை அதிகரிக்க உள்ளாராம். இப்படத்துக்கு பின் கொரோனா குமார் படத்துக்காக மீண்டும் உடல் எடையை குறைக்க போகிறாராம்.

Simbu is going to increase weight for pathu thala film again and to reduce for corona kumar

மிகவும் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்த சிம்பு, பத்து தல படத்துக்காக உடல் எடையை அதிகரிக்க மீண்டும் ரிஸ்க் எடுத்து உள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

Share this post