Ladies Special : பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்..!

Ladies mole location advantage and disadvantage

என்னதான் விஞ்ஞானம், டெக்னாலஜி, இன்டர்நெட் என பலதும் வளர்ந்து வந்தாலும் மக்கள் பல காலமாக கடைபிடித்து வரும் சில சாஸ்திரங்கள், நம்பிக்கைகள் அனைத்தும் இன்றும் ஆங்காகே பேசப்பட்டு தான் வருகிறது. அப்படி, மச்சம் பார்த்து நமது எதிர்காலத்தை கணிக்கும் நம்பிக்கைகள் காலம் கடந்து இருந்து வருகிறது.

அந்த வகையில், பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள் என்கிற முழு விவரம் குறித்த தொகுப்பு இதோ..

நெற்றி நடுவில் மச்சம் - அதிகாரமிக்க பதவியில் அமர்வார்கள். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும்.

நெற்றி வலது பக்கம் - வறுமை இருந்தாலும் நேர்மையுடன் வாழ்வார்கள்.

இடது தாடையில் மச்சம் - பார்ப்பதற்கு வசீகரமான தோற்றத்துடன் அழகாக இருப்பார்கள். நற்குணம் உடையவர்களாக இருப்பார்கள்.

வலது தாடையில் மச்சம் - பிறரால் வெறுக்கப்படுவார்கள்.

கண்களில் மச்சம் - வாழ்க்கை ஏற்றம், இறக்கம் நிறைந்ததாக இருக்கும்.

காதுகளின் மச்சம் - செலவு செய்வதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். என்ன செலவு செய்தாலும் அதற்குத் தக்கபடி பணம் வரும். சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு இருக்கும்.

நாக்கில் மச்சம் - கலை ஞானம் மற்றும் ரசனை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

முதுகில் மச்சம் - துணிச்சலான காரியங்கள் செய்யும் தைரியம் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும். உடலில் ஆரோக்கியம் திகழும்.

தொடையில் மச்சம் - படிப்படியாக கஷ்டப்பட்டு வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வருவார்கள்.

வலது தொடையில் மச்சம் - தற்பெருமையும் அடங்காபிடாரித்தனமும் இருக்கும்.

இடது முழங்காலில் மச்சம் - புத்தி கூர்மையானவர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும் இருப்பார்கள்.

வலது முழங்காலில் மச்சம் - பிடிவாதக்கார்களாக இருப்பார்கள்.

பெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள்.அதுவே, இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம்.

தலையில் மச்சம் - பேராசையும், பொறாமை குணம் நிறைய இருக்கும். வாழ்க்கையில் மன நிறைவு இருக்காது.

மூக்கு மீது மச்சம் - மிகப் பெரிய அதிர்ஷடம். நினைத்ததெல்லாம் நடக்கும். ஆடம்பர வாழ்வு, அந்தஸ்து இருக்கும். சமூக மதிப்பு கிடைக்கும்.

உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டுகளில் மச்சம் இருந்தால் இவர்களது குடும்பம் இனிமையாக இருக்கும். கலாரசனை உடைய பெண்களாக இருப்பார்கள். சிறந்த நிர்வாகியாகவும் இருப்பார்கள்.

Share this post