ரச்சிதா உடனான விவாகரத்து உண்மையா? என்ன நடந்தது ? முதன்முறையாக பேசிய தினேஷ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ரக்சிதா மஹாலக்ஷ்மி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய அனைத்து மொழி சீரியல் தொடர்களிலும் நடித்துள்ளார். தமிழ் மொழியில், சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என அனைத்து பிரபல சேனல்களிலும் நடித்துள்ளார்.
பிரிவோம் சந்திப்போம், இளவரசி, சரவணன் மீனாட்சி 2 & 3, நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்களில் நடித்துள்ளார். தன்னுடன் சீரியல் தொடரில் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
கடந்த ஒரு ஆண்டாக கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இவர்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க இருதரப்பு குடும்பத்தினரும் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரக்சிதா தற்போது ‘சொல்ல மறந்த கதை’ என்ற தொடரில் நடித்து வருகிறர். இந்த தொடரில் கணவனை இழந்து, இரு குழந்தைகளை வளர்க்க போராடும் தாய் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் நாயகனாக விஜய் டிவி ஆபீஸ் சீரியல் விஷ்ணு நடிக்கிறார்.
தற்போது சொல்ல மறந்த கதை நடித்து வரும் சீரியல் கேரக்டர் தன் சொந்த வாழ்வோடு ஒத்துப்போவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகை ரச்சிதா விரைவில் இயக்குனர் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.
சமீபகாலமாக சோசியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, விதவிதமான கிளாமர் உடைகளில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். ரச்சிதாவை பெரும்பாலும் புடவை அணிந்தபடியே பார்த்த ரசிகர்கள், அவரின் கவர்ச்சி அவதாரத்தை பார்த்து வாயடைத்துப் போயுள்ளனர். தற்போது வெப் தொடர் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அந்த வெப் தொடர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவாகரத்து, 2வது திருமணம் என எதை பற்றியும் ரச்சிதா மற்றும் தினேஷ், எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை. இதனால், இது உண்மையாக இருக்கலாம் என பல வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.
தற்போது, இந்த விவகாரம் குறித்து தினேஷ், சமீபத்தில் மனம்திறந்து பேசி உள்ளார். அவர் கூறுகையில், “ரச்சிதா உடனான பிரிவு தற்காலிகமானது தான். மேலும் ரச்சிதாவுடனான பிரச்சனை காலப்போக்கில் சரியாகிவிடும் என நம்பிக்கை தெரிவித்துள்ள தினேஷ், தாங்கள் இருவரும் இதுவரை விவாகரத்து செய்வதற்கான எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை” என்று கூறி உள்ளார். இதன்மூலம் ரச்சிதா உடனான விவாகரத்து குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தினேஷ்.