ராஜா ராணி அர்ச்சனா போட்ட காதல் Reels Video.. அப்போ Confirm'ஆ ? வைரலாகும் வீடியோ.
மாடலிங், விஜே தற்போது சீரியல் நடிகை என அடுத்தடுத்து வெற்றி பாதையை அமைத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் நடிகை அர்ச்சனா. இவர் சன் தொலைக்காட்சியில் விஜேவாக இருந்து வந்தவர். அதனைத் தொடர்ந்து, யூடியூபில் குறும்படங்கள், வெப் சீரீஸ் என இளசுகள் மத்தியில் செம பேமஸ்.
இதன் மூலம், சித்து, ஆலியா மானசா நடிப்பில் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில், வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும், தனது அழகான தோற்றம், சேலை காட்டும் விதம் என இவரது appearance’க்கு இளம் பெண்கள் வட்டாரத்தில் இவர் பாப்புலர்.
மேலும் முரட்டு சிங்கிள் சீசன் 2, காமெடி ராஜா கலக்கல் ராணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் தோன்றி வருகிறார். மேலும், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அர்ச்சனா, மாடர்ன் உடைகள், ரீல்ஸ் வீடியோ என நாளுக்கு நாள் பாலோயர்ஸ்களை குவித்து வருகிறார். இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவவ்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகியும் வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்களில் பாரதி கண்ணம்மா தொடர் எப்போதும் டிஆர்பியில் இடம் பெற்றுவிடும். இதில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் அனைவரும் மிக பேமஸ். இந்த தொடரில் கதாநாயகனாக நடித்து வருபவர் அருண் பிரசாத்திற்கு கடந்த வருடம் சிறந்த கதாநாயகன் விருது கிடைத்தது.
அருண் பிரசாத் காதல் பற்றிய தகவல் இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வந்தது. விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் தொடர் வில்லியான அர்ச்சனாவுக்கு இம்முறை விஜய் விருது கிடைத்தது. அப்போது அவரை தொகுப்பாளர்கள் பாரதி, டாக்டர், DNA போன்ற விஷயங்களை கூறி கூறி கிண்டல் செய்தார்கள்.
இதனால், அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா இருவரும் காதலிக்கிறார்களா என்ற பேச்சு மக்களிடம் எழுந்தது. அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா ஒன்றாக இருக்கும் சில வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வந்தது. சமீபகாலமாக, நடிகர் அருண் பிரசாத்திற்கு விரைவில் திருமணம் என செய்திகள் வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் அவருக்கும் ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக நடிக்கும் அர்ச்சனாவுக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் சீக்ரெட்டாக முடிந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் அருண், அர்ச்சனா இருவரும் காருக்குள் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியானது. இப்படி ஒரு நிலையில், அர்ச்சனாவின் ரீல்ஸ் வீடியோ ஒன்று செம வைரலாகி வருகிறது. அதில் அவர் கமலின் பஞ்சதந்திரம் படத்தில் இடம்பெற்ற ‘உன்னோடு காதல் என்று’ என்ற பாடலுக்கு எக்ஸ்பிரஷன் கொடுத்து வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சொல்லி வைத்தது போல அருண் உடனான காதல் வதந்தியா? என்ற கேள்வி கேட்டு அர்ச்சனாவை கலாய்த்து வருகின்றனர்.